'தமிழ்நாடு எனும் தனி நாடே இறுதி இலக்கு'.. அதுதான் தமிழ் தேசியம்! திருமாவளவன் கொளுத்திய சரவெடி!
சென்னை: தமிழ்நாடு எனும் 'தனி நாடு' அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல, தமிழ் தேசிய இயக்கத்தில் விசிகவின் பங்களிப்பு மகத்தானது எனவும், பெரிய பெரிய கட்சிகள் செய்ய முடியாததை விசிக செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

நூல் வெளியீடு
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர் ஜெ.பாரத் எழுதிய 'திருமாவின் சிந்தனை கோட்பாடுகள்' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், அவர் பேசியதாவது, "அரசியல் என்பது பதவிக்காக, அதிகாரத்திற்காக பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்கிற உணர்வு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. மிக மிக குறைந்த நபர்கள்தான் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டி விவாதிக்கிறார்கள். அனைத்து காட்சியிலும் இந்த நபர்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளனர்.

செயல் திட்டம்
ஆனால் அப்படிப்பட்டவர்கள்தான் முக்கிய பொறுப்புகள் பெற்று கட்சியை வழி நடத்துவார்கள். 'அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி' என்பது கொள்கையா? கோட்பாடா? என பலர் கேள்வியெழுப்புகின்றனர். அவர்களுக்கான பதில் இதுதான். அதாவது இது ஒரு செயல் திட்டம். ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இவை மூன்றும்தான் உழைக்கும் மக்களுக்கு பகை. சாதி, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், குடும்பம், என இவை எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆக இவற்றிற்கு எதிராக ஒடுக்கப்படுகிற மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கொள்கை முழக்கம்தான் 'அடங்க மறுத்தல், அத்துமீறுதல், திருப்பி அடித்தல்'.

சாதி தூய்மை வாதம்
இது வன்முறை முழக்கம் அல்ல, வன்முறைக்கு எதிரான முழக்கம். மராத்வாட பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போது காவல் துறை எங்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு விசிக பின்வாங்கிவிடாது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இது ஒருபுறம் எனில் மறுபுறம் ஆணவ கொலைகள் குறித்து நாம் விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஆணவ கொலைகளை ஆதரிக்கிறவர்கள் சாதி தூய்மைவாதிகள். தூய்மை வாதம் என்பது பழமை வாதம், சனாதனத்தின் ஒரு கூறு.

தனி நாடு
இவற்றையெல்லாம்தான் நாம் எதிர்க்கிறோம். நம்முடைய தளம் தமிழ் தேசியம். இந்த எதிர்ப்பு நம்முடைய இயக்கத்தின் ஒரு கூறு. தமிழ் தேசிய இயக்கங்களில் விசிகவின் பங்களிப்பு மகத்தானது. பெரிய பெரிய கட்சிகள் செய்ய முடியாததை சாத்தியப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் ஒன்றியமாகதான் மத்திய அரசு இருக்க வேண்டும். மாநிலங்களின் ஒன்றியம் என்பதை விட தேசிய இனங்களின் ஒன்றியம் என இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications