திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. போட்டியிட விரும்பும் திருமாவளவன்.. சைலண்ட் மோடில் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திருமாவளவன் ஆர்வமாக இருக்கும் நிலையில், இதுதொடர்பாக இறுதி முடிவை எடுக்காமல் முதல்வர் விஜய் அமைதி காத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் திருமாவளவன் ராஜினாமா செய்யும் சிதம்பரம் தொகுதி எம்பி சீட் தவெகவுக்கு கொடுக்கவும் விசிக முன் வந்துள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதாக இருந்தார். திடீரென தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு திருமாவளவன் திரும்ப விரும்பியது விவாதமாகியது. ஆனால் சிதம்பரம் தொகுதி எம்பியாகி 2 ஆண்டுகள் கூட முழுமையாக முடிவடையாத சூழலில், அங்கும் இடைத்தேர்தல் நடந்தால் சிக்கலாகும் என்று திமுக கணக்கு போட்டது.

Thirumavalavan

இதனால் திருமாவளவன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கினார். தேர்தலில் தவெக வென்று ஆட்சியை பிடித்துள்ள சூழலில், அக்கட்சியுடன் விசிக கூட்டணி அமைத்துள்ளது. தற்போது மீண்டும் திருமாவளவனுக்கு மாநில அரசியலுக்கு திரும்பும் ஆசை துளிர்விட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் அமைச்சர் வன்னி அரசு மீது கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இதனிடையே திருமாவளவனை அமைச்சரவைக்குள் கொண்டு வர தவெக தயாராகி வருகிறது. விசிகவை கூட்டணிக்குள் வைத்திருந்த விரும்பும் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் இருவரும், நீங்கள் அமைச்சராகிவிட்டால், சிதம்பரம் எம்பி தொகுதியை தவெகவுக்கு கொடுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு திருமாவளவனும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திருமாவளவனை வேட்பாளராக்க்க காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் சிதம்பரம் எம்பி தொகுதி பேச்சுவார்த்தை தொடர்பாக விஜய்யிடம் தகவல் சொல்லப்பட்டுள்ளன.

இதனை கேட்டு கொண்ட முதல்வர் விஜய், எந்த பதிலும் அளிக்காமல் அமைதி காத்துள்ளார். விஜய்யின் அமைதி தொடர்பாக திருமாவளவனுக்கு கூறப்பட்டுள்ளது. இதனால் விசிகவினரும், திருமாவளவனும் அப்செட்டில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் விஜய் இறுதி முடிவை எடுப்பார் என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+