சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைக்கு இது மிகப்பெரிய விடியல்.. ஸ்டாலினின் கனவு திட்டம்.. மா சுப்பிரமணியன் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை : பயோ மைனிங் முறையில் சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கை , அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சுத்தம் செய்து அந்த பகுதியை சீர்படுத்தும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டள்ளது. இந்த திட்டம் தான் சென்னைக்கு மிகப்பெரிய விடியல் என்று சுகாதரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

பயோ மைனிங் முறையில் சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கை அகழ்ந்தெடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அப்பகுதியை சீர் படுத்துவதற்கான திட்டங்களை பார்வையிட்டு அதில் ஒரு திட்டப்பகுதியை இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தனர்.

சென்னை பெருங்குடியில் உள்ள 235 ஏக்கர் குப்பைக் கிடங்கை இன்று காலை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.

தமிழகத்தில் பண்டிகை காலத்தில் கொரோனா 3ஆம் அலை ஏற்படுமா? தெளிவாக விளக்கிய அமைச்சர் மா. சு தமிழகத்தில் பண்டிகை காலத்தில் கொரோனா 3ஆம் அலை ஏற்படுமா? தெளிவாக விளக்கிய அமைச்சர் மா. சு

குப்பை

குப்பை

முதலில் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, "குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரிப்பது நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மிகவும் சவாலானது. பல பேரூராட்சிகளில் குப்பைகளை கொட்டுவதற்கான இடங்களை தேடுவதே பெரும் சிக்கலாக உள்ளது. ஒருபுறம் குப்பைகளை மக்கள் எடுக்கச் சொல்கிறார்கள். மற்றொருபுறம் அந்த குப்பைகளை தங்கள் இடங்களில் கொட்ட வேண்டாம் என்கிறார்கள்.

டெண்டர்

டெண்டர்

இந்த சிக்கல்களைக் களையவே பயோ மைனிங் முறையில் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக, உலோகங்கள் தனியாக, மக்கும் குப்பைகள் தனியாக என்று குப்பைகளை பிரிப்பதற்காக தான் டெண்டர் விடப்பட்டது என்றார்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், திமுக ஆட்சி காலகட்டத்தில் தான் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த பத்து ஆண்டு காலமும் எதுவுமே செய்யாமல் விட்டு விட்டனர். இந்த பயோ மைனிங் முறை என்பது பெருங்குடி பகுதியில் உள்ள மொத்த குப்பைகளை 6 பேக்கேஜ்களாக பிரித்து அடுத்த மூன்று ஆண்டுகளில் இப்பகுதியை மீட்டெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது .

ஆறு மாதம்

ஆறு மாதம்

இந்தப் பெருங்குடிப் பகுதியின் 235 ஏக்கரில் 34 லட்சத்தி 2000 டன் பழைய குப்பைகள் மட்டும் உள்ளது. இந்தப் பகுதியை மீட்டெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதை போலவே கொடுங்கையூரில் அடுத்த ஆறு மாதத்தில் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. உண்மையிலேயே இந்த குப்பைகளை எடுத்து பிரித்து நீக்கக்கூடிய இந்த திட்டமானது சென்னைக்கு இது மிகப்பெரிய விடியல் .

அரசு முடிவு

அரசு முடிவு

இது முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டம். இப்பகுதியிலுள்ள செங்கல் படிவங்கள் பிளாஸ்டிக் குப்பைகளை மக்கும் மக்காத குப்பைகள் என அவற்றைப் பிரித்தெடுத்து சீர்படுத்தி இதேபோல உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டுப் பகுதி நிலத்தையும் பசுமையாக மாற்றுவதற்கான முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்" இவ்வாறு கூறினார்.

English summary
A project has been launched to clean up the landfill in the Chennai metropolitan area by bio-mining and rehabilitate the area within the next three years. Health Minister Ma Subramaniam said that this project is the biggest dawn for Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X