புத்தாண்டு கொண்டாட்டம்.. தீவிர பாதுகாப்பு பணிகளில் போலீசார்.. தடுப்புகள் அமைத்து அதிரடி சோதனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, 8 மணிக்கு மேல் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. சென்னையின் அனைத்து முக்கிய சாலைகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் இரண்டு வாகனங்கள் ஒன்றாகச் செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி இருந்த நிலையில், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாலைகளில் அதிவேகமாக வரும் வாகனங்கள், மது அருந்திவிட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை சார்பாக எச்சரிக்கப்பட்டது.

புத்தாண்டு பார்ட்டிகளுக்குச் செல்பவர்களுக்கு ஹோட்டல் நிர்வாகமே போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

புத்தாண்டு 2023

புத்தாண்டு 2023

ஆங்கில புத்தாண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது. 2023ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

ரோந்து தீவிரம்

ரோந்து தீவிரம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் எல்லை மீறுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகரம் முழுவதும் விடிய விடிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னை மாநகர சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி யாராவது வாகனங்களை இயக்கினால் அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பார்ட்டி - கடும் எச்சரிக்கை

பார்ட்டி - கடும் எச்சரிக்கை

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும் போலீசார் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தனியார் இடங்களில் நடைபெறும் மது விருந்தில் பங்கேற்பவர்கள் 'பார்ட்டி' முடிந்ததும் வீடுகளுக்கு செல்ல ஓட்டல் நிர்வாகத்தினரே வாகன வசதியை ஏற்படுத்தி கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை மீறி மதுபோதையில் கார், மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

தடுப்புகள் அமைத்து சோதனை

தடுப்புகள் அமைத்து சோதனை

இந்த நிலையில் சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் இன்று மாலை முதல் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசாம்பவிதங்களை தவிர்க்கும் வகையில் சென்னையில் கத்திப்பாரா உள்ளிட்ட மேம்பாலங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை புறநகர் பகுதி ஜிஎஸ்டி சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

தீவிர கண்காணிப்பு

சென்னை முழுவதும் சாலைகளில் அதிவேகமாக வரும் வாகனங்கள், மது அருந்திவிட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு கடற்கரை சாலை, அண்ணா சாலை மற்றும் கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+