பிக் பாஸ் 5: ஏலேய் எத்தனை பேருக்கு பேதில போபோதுனு தெரியலையே.. ஜிபி முத்து வந்துட்டாராமே?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலமான ஜிபி முத்துவும் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.
விஜய் டிவியில் என்டமால் நிறுவனம் தயாரிப்பில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இவர் வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் இந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் நடந்த விஷயங்களை விவாதித்து மக்களின் வாக்குகளுக்கேற்ப போட்டியாளர்களை எலிமினேட் செய்வது வழக்கம்.

15 போட்டியாளர்கள்
மொத்தம் 15 அல்லது 18 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களில் கடைசி வரை அந்த வீட்டில் நீடிக்கும் நபர் வெற்றியாளராக கருதப்படுவார்கள். போட்டி, பொறாமை, வம்பு, தும்பு உள்ளிட்டவற்றை தாண்டி இந்த வீட்டில் கடைசி வரை நிலைத்திருப்பது அத்தனை எளிதானது அல்ல என்பது அந்த வீட்டில் வசித்தவர்களுக்கு தெரியும்.

நிகழ்ச்சி
இது வரை 4 சீசன்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சினிமா வாய்ப்பு, புகழ் ஆகியவை கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த பிக்பாஸ் சீசன் 4 கடந்த அக்டோபர் 2020 ஆம் ஆண்டு தொடங்கி 17 ஜனவரி 2021 இல் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட போது கொரோனா காலம் என்பதால் போட்டியாளர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே தனிமைப்படுத்தப்பட்டனர்.

எதிர்பார்ப்பு
அது போல் இந்த முறை சீசன் 5 எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசன் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கவிருப்பதாகவும் உறுதியற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போட்டியில் மிலா, சந்தோஷ் பிரதாப், பவானி ரெட்டி, சூசன் ஜார்ஜ், பிரியங்கா தேஷ்பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

இமான் அண்ணாச்சி
மேலும் பிரியாராமன், இமான் அண்ணாச்சி, டிக்டாக் புகழ் ஜிபி முத்து ஆகியோரும் போட்டியாளர்களாக கலந்து கொள்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது உறுதி செய்யப்பட்ட தகவல்கள் என விஜய் டிவி வட்டாரங்கள் கூறி வருகிறார்கள். ஆனாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தால் மட்டுமே நாம் அதை நம்ப முடியும். இந்த போட்டியாளர்களில் மிகவும் கோபப்படக் கூடிய நபர் என்றால் அவர் ஜிபி முத்து.

கோபக்கார முத்து
அதே நேரத்தில் அனைவரையும் சிரிக்கவும் வைப்பதை அவரது வீடியோக்கள் மூலம் அறியலாம். இவர் பேஸ்புக், யூடியூப் சானல்களை நடத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்துக்காரர், அவர் பேசும் தமிழை கேட்கவே நிறைய பேர் அவரது சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். ஆனாலும் அவரை பாராட்டுவோரை விட விமர்சனம் செய்வோரே அதிகம் பேர் உள்ளார்கள்.

கோபத்தை கொப்பளிக்கும் முத்து
அவ்வாறு விமர்சனம் செய்வோரை மிகவும் கோபத்துடன் செத்த பயலே, நார பயலே, பேதில போவ என தகாத வார்த்தைகளால் பேசுவார். எனினும் அவரை விடுவதாக தெரியவில்லை. தற்போது பிக்பாஸ் சீசன் 5 -இல் அவர் இடம்பெற போவதாக தகவல்கள் வெளியான நிலையில் அங்குள்ள போட்டியாளர்களுடன் இவர் எப்படி ஒத்து போவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் இவரை அடக்கும் ஆளாக இமான் அண்ணாச்சி செயல்படுவார் என்றும் பலர் தெரிவிக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications