• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன பெரிய TTFவாசன்? நான் வர்றேன் தனியா! ரேஸ் கெட்டப்பில் களமிறங்கிய ஜிபி முத்து! வா தலைவா வா தலைவா!

Google Oneindia Tamil News

சென்னை : டிக் டாக் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமாகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற ஜிபி முத்து தற்போது 2கே கிட்ஸ்களின் நாயகனான டிடிஎஃப் வாசனுக்கு டப் கொடுக்கும் வகையில் ரேஸ் உடையில் களமிறங்கி பைக் ஓட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு அவருக்கு பாராட்டுகளும் குவிகிறது.

சமூக ஊடகங்களில் யாரை தெரிகிறதோ இல்லையோ டிக் டாக் பார்த்தவர்களுக்கு ஜிபி முத்து என்ற பெயர் மிகவும் பரிச்சயம். குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அவரை தெரியாதவர்களே இருக்க முடியாது.

இத்தனைக்கும் நடனமாடியோ மேஜிக் சாகசங்கள் செய்து அவர் பிரபலமாகவில்லை தனது வெள்ளந்தியான பேச்சுக்கள் மூலம் நகைச்சுவை தரும் அவர் செய்கைகளுக்கும், எமோசனல் முக பாவனைகளுக்குமே ரசிகர் பட்டாளம் அதிகம்.

ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க.. மிகவும் கலங்கி பேசிய டிடிஎஃப் வாசன்.. ஏறி மிதிக்காதீங்கன்னு குமுறல் ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க.. மிகவும் கலங்கி பேசிய டிடிஎஃப் வாசன்.. ஏறி மிதிக்காதீங்கன்னு குமுறல்

ஜி.பி.முத்து

ஜி.பி.முத்து

கடந்த 2020ஆம் ஆண்டு அடுத்தடுத்த புகார்கள் காரணமாக டிக் டாக் தடை செய்யப்பட்டபோது நண்பர்களே எனக்கு மன ரொம்ப மன உளைச்சலா இருக்கு நான் சூசைட் பண்ணிக்க போறேன் எனவும், டிக்டாக் தடை நீக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்தவர் ஜி.பி.முத்து. பின்னர் ஒருவழியாக அதிலிருந்து மீண்டு இன்ஸ்டாகிராம் என அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். குறிப்பாக அவரது ரசிகர்கள் அனுப்பும் பரிசுகளை பிரித்து பார்த்து அதனை விளக்குவது வழக்கம்.

 லட்சக்கணக்கில் ரசிகர்கள்

லட்சக்கணக்கில் ரசிகர்கள்

அவ்வாறு பல வீடியோக்களில் வெள்ளந்தியான பேச்சுக்கள் மூலம் பலரில் மனதிலும் இடம்பிடித்துள்ளார். இதில் தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கில் இவருக்கு ரசிகர்கள் உருவாகினர். தொடர்ந்து கடை திறப்பு விழாக்களிலும் தலைகாட்டிய அவருக்கு நடிகருக்கு இணையான ரசிகர்கள் குவிந்தது தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.

 ரேஸ் உடை

ரேஸ் உடை

இந்த நிலையில் தான் 80'ஸ் கிட்ஸ் வம்சத்தை சேர்ந்த ஜிபி முத்து 2கே கிட்ஸ் நாயகனான டிடிஎஃப் வாசனுக்கு போட்டி அளிக்கும் வகையில் ரேஸ் உடை அணிந்து பைக் ஓட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. என்ன ரேஸ் உடையை போட்டவுடன் ஜிபி முத்துவால் நடக்கக்கூட முடியவில்லை என்பதுதான் உண்மை. இருந்தும் ஒருவழியாக நடந்து சென்று பைக்கில் ஏறி ஓட்டிய காட்சிகள் யூடியூப் கலக்கி வருகிறது. பலர் அவரை கலாய்த்து வந்தாலும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதுவும் தனக்கு ஒரு விளம்பரம் தான் என்கிறார் ஜிபி முத்து.

Recommended Video

  Who Is TTF Vasan? | TTF Vasan-க்கு Police கொடுத்த Warning | TTF Fans Meet *TamilNadu
  டிடிஎஃப் வாசன் ரசிகர்கள்

  டிடிஎஃப் வாசன் ரசிகர்கள்

  இதில் டிடிஎஃப் வாசனுக்கு என்ன பங்கு என்று கேட்கிறீர்களா? ஜிபி முத்துவை கலாய்ப்பவர்கள் பெரும்பாலானோர் டிடிஎஃப் வாசனின் ரசிகர்கள் என்பது தான் குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர் சந்திப்பின் போது டிடிஎஃப் வாசனுக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இதன் காரணமாக திடீரென அவர் புகழடைந்த நிலையில் மிக வேகமாக வாகனம் ஓட்டியதாக புகார்கள் இருந்தன. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஒரு வழியாக சர்ச்சை ஓய்ந்து தற்போது தான் நிம்மதியாக இருக்கிறார். இந்த நிலையில் ஜிபி முத்து ரசிகர்களுக்கு இடையேயும் டிடிஎப் வாசன் ரசிகர்களுக்கு இடையே போர் மூண்டிருக்கிறது.

  English summary
  Gp Muthu, who became famous on social media through Tik Tok and took part in TV shows, is currently riding a bike in a race suit to give a tip to 2K Kids hero TTF Vasan.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X