Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு- களத்தில் 79,433 பேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பதவிகளுக்கும் மொத்தம் 79,433 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மேலும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கும் அக்டோபர் 6, 9-ல் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. கடந்த 22-ந்தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற நேற்று ஞாயிற்றுக்கிழமை கடைசிநாளாகும். இதனையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

வேட்புமனுக்கள் விவரம்

வேட்புமனுக்கள் விவரம்

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தலுக்கான அறிவிப்பு 13/09/2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட 27,003 பதவியிடங்களில் நீதிமன்ற வழக்கின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்தூர் கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள 27,002 பதவியிடங்களுக்கு 98,151 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 1,166 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்குப் பின் நிராகரிக்கப்பட்டன. 14,571 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின்றி தேர்வு..

போட்டியின்றி தேர்வு..

2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளது.

மொத்தம் 27 ஆயிரம் இடங்கள்

மொத்தம் 27 ஆயிரம் இடங்கள்

9 மாவட்டங்களில் உள்ள 27,003 இடங்களுக்கு பெறப்பட்ட வேட்புமனுக்கள் எண்ணிக்கை 98,151. நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் எண்ணிக்கை 1,166. இந்த 9 மாவட்டங்களில் 14, 571 பேர் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 2,981 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2 கிராம ஊராட்சி தலைவர் பதவி, 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.

79,433 பேர் களத்தில்..

79,433 பேர் களத்தில்..

மொத்தம் 23,998 பதவியிடங்களுக்கு, 79,433 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 827 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,064 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10, 792 பேர் போட்டியிடுகின்றனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 61,750 பேர் போட்டியிடுகின்றனர். 28 மாவட்டங்களில் 418 பதவியிடங்களுக்கு 1,386 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+