மீண்டும் மீண்டுமா.. எல்லை மீறிய ஆதவ் அர்ஜுனா.. அப்படியே அவை குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசார விவாதம் வெடித்தது.

விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வரம்பை மீறிய கருத்துகளை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகள்

சட்டப்பேரவை கூடியதும், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமுதன் கொலை குறித்துக் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசினார்.

TN Assembly Clash Over Coimbatore Student Murder Minister Aadhav Arjuna s Remarks Expunged

அவையில் ஆவேசமாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின்:

100 நாள் சாதனை என்று தம்பட்டம் அடிக்கும் தவெக அரசு, இந்த நூறு நாட்களில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு எவ்வாறு சீர்குலைந்துள்ளது என்பதை உணர வேண்டும். கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரான தொடர் ஆலோசனைகளை வழங்க அரசு தவறிவிட்டது. கோவையில் மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்டதை வெறும் மாணவர் மோதல் என்று அரசுத் தரப்பு கடந்து செல்லப் பார்ப்பது வேதனையளிக்கிறது. இது போதைப்பொருள் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்ததால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை எனக் குற்றம் சாட்டினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு நீக்கம்

உதயநிதி ஸ்டாலின் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசியபோது, தவெக அமைச்சர் நிர்மல் குமார் கடந்த கால திமுக ஆட்சியை விமர்சித்துப் பதிலளித்தார். உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய தவெக அமைச்சர் நிர்மல் குமார், "கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் புழக்கம் விஸ்வரூபம் எடுத்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் என்பவருடன் ஸ்டாலின் குடும்பத்தினர் மிக நெருக்கமாக இருந்தனர்" என்று குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலடியாக, போதைப்பொருள் வழக்கில் முந்தைய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்ததையும், சர்ச்சையில் சிக்கிய தவெக அமைச்சர் சரத் மீது முதல்வர் விஜய் இதுவரை நடவடிக்கை எடுக்காததையும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

இந்த காரசார விவாதத்தின் போது, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீரென எழுந்து சில காட்டமான கருத்துகளை முன்வைத்தார். எனினும், அவரது பேச்சு சட்டமன்ற விதிகளுக்குப் புறம்பாகவும் எல்லை மீறிய வகையிலும் அமைந்திருந்ததால், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் தலையிட்டு அப்பேச்சை அவைக்குறிப்பில் இருந்து அதிரடியாக நீக்க உத்தரவிட்டார். இந்த நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகள்தான் அதிகபட்சமாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக்கு வலுக்கும் கோரிக்கை

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அமுதன், விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்துப் புகார் அளித்த காரணத்தினாலேயே சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இவ்வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபி-சிஐடி அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகளும், பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த அனல் பறக்கும் மோதல் மாநில அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+