சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார்தான்.. ஆனால் நடக்கிறதைப் பார்த்தா.. மாற்றம் வருமோ?

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உதயமாகியுள்ள நிலையில் அதன் பின்னணியில் நடைபெற்ற போராட்டங்கள் ஏராளம்.

மயிலாடுதுறை மண்ணின் மைந்தரான ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் 'மாயூர யுத்தம்' என்ற பெயரில் அமைப்பு தொடங்கி கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக தனி மாவட்ட கோரிக்கையை முன்னெடுத்து வந்தார்.

இன்று தனி மாவட்டமாக மயிலாடுதுறை செயல்படுவதற்கான அடித்தளத்தை கடந்த 1990-ம் ஆண்டே அமைத்தவர் கோமல் அன்பரசன்.

ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம்

ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓபிஎஸ் இமேஜை அதிகரிக்கும் வகையில் தொடர்ச்சியாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஓபிஎஸ்-க்கு புதிய புதிய அடைமொழிகளுடன் இந்த விளம்பரங்கள் கொடுத்து வருகின்றன. அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான ஈபிஎஸ்க்கு கூட இது போன்ற விளம்பரங்கள் இல்லாமல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருவது ஏன்? என்கிற கேள்வி அதிமுக தொண்டர்கள் உட்பட அனைவரிடமும் எழுந்துள்ளது.

முதல்வர் வேட்பாளரும் பாஜகவும்

முதல்வர் வேட்பாளரும் பாஜகவும்

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அறிவித்த பின்னர் அதனை ஏற்காமல் சாக்கு போக்கு காரணங்களை தொடர்ச்சியாக பாஜக முன்வைத்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை கட்சி என்பதால் பாஜகவே முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என பிடிவாதம் பிடிக்கிறது பாஜக.

பாஜகவின் பகீர் தொகுதி பேரம்

பாஜகவின் பகீர் தொகுதி பேரம்

மேலும் அதிமுகவிடம் 40 அல்லது 60 தொகுதிகள் என ஒரு பார்முலாவும் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகத்துக்கு என 100 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மிச்சம் 134-ல் நீங்க போட்டியிடுங்க என்கிற ஒரு பார்முலாவையும் முன்வைக்கிறது பாஜக. இந்த இரண்டையுமே திட்டவட்டமாக முதல்வர் எடப்பாடியார் தரப்பு நிராகரித்தும் வருகிறது.

சிவி சண்முகம் எச்சரிக்கை

சிவி சண்முகம் எச்சரிக்கை

இந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்; அத்துடன் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் சதி நடப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

முதல்வர் பதவி- எடப்பாடி பேச்சு

முதல்வர் பதவி- எடப்பாடி பேச்சு


பின்னர் சென்னையில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வராக ஓபிஎஸ்- கூட அமரலாம்; அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என பொடி வைத்து பேசினார்.

பாஜக மீது கேபிஎம் அட்டாக்

பாஜக மீது கேபிஎம் அட்டாக்

அதேகூட்டத்தில் பேசிய அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமியோ, பாஜகவை மறைமுகமாக வெளுத்து வாங்கினார். கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொள்ள முடியாது என தொடங்கி தேசிய கட்சிகளின் போக்குகள் என கடுமையாகவே சாடினார். பாஜகவை கடுமையாக விமர்சித்த கேபி முனுசாமியின் பேச்சுக்கு அதிமுகவில் அமோக ஆதரவும் இருந்து வருகிறது.

ஓபிஎஸ் பாராட்டு

ஓபிஎஸ் பாராட்டு

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், பாஜகவுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கும் வகையில் மத்திய அரசு தமிழகத்துக்கு நல்லது செய்திருப்பதை சுட்டிக்காட்டினார். ஓபிஎஸ் ஏன் இப்படி பேசுகிறார் என்கிற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது.

அதிமுகவில் மாற்றம் வரும்?

அதிமுகவில் மாற்றம் வரும்?

பாஜகவை தோளில் சுமந்து கொண்டிருந்தால் நிச்சயம் மக்கள் தோல்வியைத்தான் தருவார்கள் என்கிற யதார்த்தம் அதிமுக மூத்த தலைவர்கள் பலருக்கும் புரிகிறது. ஆனால் தனிநபர் ஆதாயங்களுக்காக தேர்தல் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் பாஜகவின் அஜெண்டாவுக்குள் சில அதிமுக தலைவர்கள் சிக்கியிருப்பதையும் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதிமுகவில் இப்படி அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒரு க்ளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது.

English summary
According to the developments in AIADMK may be they will change their CM Candidate for the Tamilnadu Assembly Election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X