கவனிச்சீங்களா? திமுக அன்று சொன்ன ‘அதே வார்த்தை’.. சபாநாயகருக்கு எதிராக ‘அட்டாக்’ மோடில் எடப்பாடி!
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சிக்க சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பயன்படுத்திய அதே வார்த்தையைப் பயன்படுத்தி இன்று சபாநாயகர் அப்பாவுவை விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
மத்திய அரசை திருப்திபடுத்தினால் ஏதாவது பெரிய பதவி கிடைக்கும் என்பதற்காக ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் என திமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக்கு கறுப்பு சட்டை அணிந்து வந்த எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியதோடு, பெரிய பதவி கிடைக்கும் என்பதற்காக சபாநாயகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

முடிவெடுக்காத சபாநாயகர்
அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து இன்று சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்தனர். இதுபற்றியும், இருக்கை மாற்றம் குறித்தும் சபாநாயகரிடம் கடிதமும் கொடுத்தனர். ஆனால் இருக்கையை மாற்றுவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்னும் முடிவெடுக்கவில்லை. இருக்கை விவகாரம் தொடர்பாக நேற்றும் அதிமுகவினர் சபாநாயகரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் சபாநாயகர் இதவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

முகத்தை திருப்பிக் கொண்டு
இதனால், எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் வெள்ளை சட்டை அணிந்தே வந்திருந்தார். இன்றும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அருகிலேயே அமர்ந்து இருந்தார். இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே இல்லை. இருவருமே தர்ம சங்கடத்துடன் இறுகிய முகத்துடனேயே காணப்பட்டனர். இன்று கேள்வி நேரம் சுமார் 1 மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்றதால், ஓபிஎஸ் அருகே நீண்ட நேரம் அமருவதை தவிர்ப்பதற்காக தனது அலுவலகத்திலேயே இருந்தார் ஈபிஎஸ். கேள்வி நேரம் முடிந்த பிறகுதான் சட்டசபைக்குள் வந்தார்.

முதல்வர் ஸ்டாலின் பதில்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் முடிந்த பிறகு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை பட்டியல் போட்டு வைத்துள்ளேன். பொத்தாம் பொதுவாக கூறாமல் ஆதாரத்துடன் கூற வேண்டும், நான் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன் என்று தெரிவித்தார்.

எடப்பாடி வெளிநடப்பு
இதனைத் தொடர்ந்து, சட்டம், ஒழுங்கு குறித்த முதல்வர் ஸ்டாலினின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதனை தொடர்ந்து சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது, ஆனால், அதனைப்பற்றிப் பேச அனுமதிக்கவில்லை. நாங்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம் எனத் தெரிவித்தார்.

பெரிய பதவிக்கு அடிபோடும் சபாநாயகர்
மேலும், எங்களுக்கு பேச சபாநாயகர் அப்பாவு வாய்ப்பு அளிக்காதது வருத்தமளிக்கிறது. சபாநாயகர் நடுநிலையோடு இல்லை. பெரிய பதவி கிடைக்கும் என்பதற்காக சபாநாயகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். அதனைக் கண்டித்துத்தான் கறுப்புச் சட்டை அணிந்திருக்கிறோம் எனத் தெரிவித்தார். கடந்த ஜனவரி 9ஆம் தேதி, ஆளுநரை விமர்சிக்க சபாநாயகர் பயன்படுத்திய அதே வார்த்தையை, இன்று சபாநாயகரை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி இருக்கிறார்.

அதே வார்த்தை
கடந்த ஜனவரி 9ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்து அச்சிட்ட உரையின் சில பகுதிகளை தவிர்த்துவிட்டு வாசித்ததும், அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சர் அவை மரபை மீறிச் செயல்படுவதாகவும் ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநராக இருப்பவர்கள் மத்திய அரசை திருப்திப்படுத்தால் ஏதாவது உயர் பதவி கிடைக்கும் என்று இவ்வாறு செய்கிறார்களோ என விமர்சித்தார்.

கூட்டறிக்கையில் இடம்பெற்ற விஷயம்
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம், தமிழ்நாட்டில் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருவதாக கண்டனம் தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர். தற்போது இருப்பதைவிட 'பெரிய பதவி'யை எதிர்பார்த்து பாஜக தலைமையை மகிழ்விக்க ஆளுநர் ஆர்.என்.ரவி இப்படி அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால் பதவி விலக வேண்டும் என டி.ஆர்.பாலு, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இணைந்து வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications