சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எதிர்கட்சிகள் தவறான நடவடிக்கையை நிறுத்தணும்.. 2022 ஆகஸ்டிற்குள், புதிய பார்லி. கட்டிடம்: தமிழக பாஜக

புதிய பார்லிமென்ட் கட்டிடம் குறித்து தமிழக பாஜக அறிக்கை விடுத்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நம்முடைய நாட்டை தலைகுனிய செய்யும் தவறான நடவடிக்கைகளை, எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்வது நல்லது என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்:

தமிழகத்தில் இ-பதிவு கட்டாயம் ஓகே.. 3 பேர்தான் பயணிக்கலாமாம்.. திருமண ஆப்ஷன் வேறு மிஸ்சிங்.. குழப்பம்தமிழகத்தில் இ-பதிவு கட்டாயம் ஓகே.. 3 பேர்தான் பயணிக்கலாமாம்.. திருமண ஆப்ஷன் வேறு மிஸ்சிங்.. குழப்பம்

"கொரோனா காலகட்டத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், பார்லிமென்ட் கட்டிடம் தேவையா என, எதிர்க்கட்சியினர் பலர் கேட்கிறார்கள்.. கடந்த 1927ல் கட்டி முடிக்கப்பட்ட, நமது பார்லிமென்ட் கட்டிடம், தற்போதைய அளவில், 6.2 ரிக்டர் அளவு பூகம்பம் வந்தால் தாங்காது என ஐஐடி தெளிவுபட சொல்லி உள்ளது. அந்த கட்டிடத்தின் உறுதிக்கான தடையில்லா சான்றையும், டெல்லி தீயணைப்புத்துறை தர மறுத்துள்ளது.

வல்லுநர்கள்

வல்லுநர்கள்

கடந்த, 2009ல் பார்லிமென்ட் கட்டிடத்தை, புராதன சின்னமாக அறிவித்த நிலையில், அதை மறுபடியும் புனரமைப்பது, விரிவாக்குவது என்பதெல்லாம் இனி முடியாது... அப்படியே செய்தாலும், பழமை வாய்ந்த கட்டிடம் தாங்காது... புதிய பார்லிமென்ட் மற்றும் தலைமை அரசு மையத்தை அமைப்பது குறித்து, 2016ல் அனைத்து கட்சிகளின் எம்பிக்களையும், வல்லுனர்களையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுத்தது.

 போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

இதன்படி, நாடு சுதந்திரம் பெற்ற, 75ம் ஆண்டான, 2022 ஆகஸ்டிற்குள், புதிய பார்லிமென்ட் கட்டிடத்தை முழுமையாக்குவதே, தற்போதைய திட்டம்... பாதுகாப்பு அதற்காக, 971 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. பிரதமர் அலுவலகம், இல்லம் ஒரே இடத்தில் அமைவதால், போக்குவரத்து நெரிசல் குறையும்.. பாதுகாப்பு பலப்படும்...

 பணம் ஒதுக்கீடு

பணம் ஒதுக்கீடு

கட்டிடத்திற்கான செலவு தொகையை, கொரோனா தொற்று தடுப்பு பணிக்கு செலவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் சொல்வது விந்தையிலும் விந்தை.. சுகாதார நல கட்டமைப்புகளை பெருக்க, மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

 அறிக்கை

அறிக்கை

இந்நிலையில், பார்லிமென்ட் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச அரங்கில், நம் நாட்டை தலைகுனிய செய்யும் தவறான நடவடிக்கையை, எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்வது நல்லது... புதிய பார்லிமென்ட் கட்டிடம், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை போற்றுவதோடு, ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்கும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
TN BJP Narayanan Tirupatis statement about New parliament building
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X