அது என்ன சூப்பர் கேம்பஸ் திட்டம்? நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிதியமைச்சர் மரிய வில்சன், கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையின் உட்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் பல்வேறு பிரம்மாண்டமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மாநிலத்தின் எதிர்காலத் தூண்களாகத் திகழும் மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்கும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கும் முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைக்கு மாபெரும் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தரமான கல்வியைக் கொண்டு சேர்க்கும் நோக்கில், பள்ளிப் கல்வித்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார். அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி மற்றும் நவீனக் கற்றல் முறைகளை ஊக்கப்படுத்த இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும்.

TN Budget 2026 Super Campus scheme announced for the schools - What it is

அதேபோல், தமிழக மாணவர்களை உலகளாவிய அளவில் போட்டியிட தயார்படுத்தும் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கல்லூரி உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த இத்தொகை வழிவகுக்கும்.

கல்லூரி மாணவர்களுக்கு 'வெற்றி மடிக்கணினி' திட்டம்

டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப தமிழகத்தைச் சீரமைத்து உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையின் கீழ், கல்லூரி மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை அதிகரிக்கும் பொருட்டு *வெற்றி மடிக்கணினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த கல்லூரி மாணவர்களுக்கு அதிநவீன மடிக்கணினிகள் வழங்கிட இந்த பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இந்த அறிவிப்பு பேரவையில் இருந்த உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

10,000 பள்ளிகளில் 'சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்' திட்டம்

பள்ளிகளின் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழல் தூய்மையையும் உறுதிசெய்யும் விதமாக *சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் என்ற புதிய திட்டம் முதற்கட்டமாக 10,000 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ள வளாகங்களைத் தூய்மையாகவும், நவீன வசதிகளுடன் கூடிய பசுமை மண்டலங்களாகவும் மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும். எங்களது ஆட்சியில் மாணவர்களுக்குச் 'சூப்பர் சேஃப்' மற்றும் 'சூப்பர் ஸ்கூல்' சூழல் உறுதியாகக் கிடைக்கும் என நிதியமைச்சர் தனது உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டடைந்தார்.

சிறப்பு அரசு சட்டக்கல்லூரி & நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாடு

சட்டக் கல்வியை மேலும் பரவலாக்கவும், ஏழை எளிய மாணவர்களுக்குச் சட்டப் படிப்பில் சம வாய்ப்பு வழங்கிடவும் மாநிலத்தில் புதிய சிறப்பு அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மேலும், மருத்துவச் சேர்க்கையில் தமிழக மாணவர்களின் உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து தீவிரமாக எதிர்த்து வருகிறது என்பதை நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசைத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனப் பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

டிஜிட்டல் சகாப்தத்திற்கு ஏற்ப தமிழகத்தைக் கல்வியிலும் தொழில்நுட்பத்திலும் முதன்மை மாநிலமாக மாற்றும் நோக்கில், இந்த பட்ஜெட் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+