கருணாநிதி ஆட்சியில் டிஜிபியாக இருந்த முகர்ஜி காலமானார்.. போலீசார் சோகம்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி முகர்ஜி (75), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் 2006 முதல் 2007 வரை சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பதவி வகித்தவர் டி.முகர்ஜி. பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னை மணப்பாக்கத்தில் வசித்து வந்த முகர்ஜி, அண்மைக்காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழகக் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

முன்னாள் டிஜிபி முகர்ஜி
தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான டி.முகர்ஜி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவல்துறையில் பணியாற்றி உள்ளார். சிபிஐயிலும் நீண்டகாலம் பணிபுரிந்துள்ளார். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது கடந்த 2006 மற்றம் 2007ஆம் ஆண்டுகளில் தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றார் முகர்ஜி.

காவல்துறையினர் சோகம்
பின்னர் தனது குடும்பத்துடன் சென்னை ராமாபுரத்தை அடுத்த மணப்பாக்கம் ஐபிஎஸ் அதிகாரிகள் காலணியில் வசித்து வந்த அவர், சில காலமாக முதுமை காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் முன்னாள் டிஜிபி முகர்ஜி காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. முகர்ஜி உடலுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் காவல்துறை டிஜிபி முகர்ஜி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "காவல்துறை முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவு செய்தி கேட்டு துயரத்திற்கு உள்ளானேன். முகர்ஜி கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழக அரசில் தமிழக காவல்துறைத் தலைவராகச் சிறப்புற பணியாற்றியவர்.

புலனாய்வு அமைப்பு
நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐஇல் நீண்ட காலம் பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். காவல்துறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய முகர்ஜியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரோடு பணியாற்றிய காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications