ஹாட்ரிக் வெற்றி எப்படி?.. மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்.. அப்படியே வியந்துபோன கொளத்தூர்
சென்னை: கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது மாநிலத்தில் கொரோனா உச்சம், மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு என நெருக்கடி நிலவியது.
ஆனால் அதையெல்லாம் திறமையாக எதிர்க்கொண்டு இன்று தமிழ்நாட்டில் கொரோனா பரவலை 6,000-க்குள் கொண்டு சென்று விட்டது தமிழ்நாடு அரசு.

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் விசிட்
முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். முதல்வராக பல்வேறு பணிகள் இருந்தாலும் தன்னை வெற்றி பெற வைத்த கொளத்தூர் தொகுதியில் அடிக்கடி சென்று நலத்திட்ட உதவிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுதல் ஆகியவற்றை செய்யும் பணியை முதல்வர் ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதிக கவனம்
2011-ம் ஆண்டு தேர்தல், 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தேர்தல்களில் ஸ்டாலினுக்கு வெற்றியை கையில் தூக்கி கொடுத்துள்ளது கொளத்தூர். இதனால் தான் எதிர்கட்சியாக இருந்தபோது கொளத்தூர் தொகுதியில் கவனம் செலுத்தியதை விட தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றும் கொளத்தூர் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மனம் திறந்த முதல்வர்
கொளத்தூர் டெம்பிள் ஸ்கூலில் பொதுநலச் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார். அப்போது கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது எப்படி? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக மனம் திறந்தார்.

வாரம் ஒருமுறை
''எம்.எல்.ஏவாக இருந்தபோது 10 நாட்களுக்கு ஒருமுறைதான் கொளத்தூர் தொகுதிக்கு வந்தேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வாரத்துக்கு ஒரு முறை வருகிறேன். நான் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை பயன்படுத்தி இங்குள்ள நிர்வாகிகள் ஒற்றுமையாக பணியாற்றினார்கள். மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் வெற்றிபெறுகிறேன் என்றால் அதற்கு இதுதான் காரணம்.

பன்மடங்கு உழைப்பேன்
பல சட்டமன்ற உறுப்பினர்கள் பொறாமைப்படக்கூடிய அளவுக்கு கொளத்தூர் தொகுதியை நாம் உருவாக்கி இருக்கிறோம். எதிர்க்கட்சி உறுப்பினராக எப்படி சீரிய முறையில் பணியாற்றினேனோ, அதைவிட பன்மடங்கு பணிகளை கொளத்தூர் மக்களுக்காக நிறைவேற்றுவேன்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியபோது அங்கு இருந்தவர்கள் வியந்து பார்த்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications