ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெறணும்.. மத்திய அரசுக்கு, ஸ்டாலின் ஸ்டிராங் லெட்டர்!
சென்னை: மத்திய அரசு ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இந்த சட்ட மசோதா இருக்கிறது என்று அவர் கூறி உள்ளார்.
Recommended Video
மத்திய அரசு ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை கடந்த ஜூன் 18-ம் தேதி வெளியிட்டது. மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த திரையுலகமும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

சூர்யா எதிர்ப்பு
தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர் சூர்யா முதன் முதலில் இந்த மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். ''அரசின் சட்டம் என்பது மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்; மக்களின் குரல்வளையை நெறிக்க கூடாது'' என்று நேரடியாக குற்றம் சாட்டி இருந்தார் சூர்யா. அதன்பின்னர் பல திரை கலைஞர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

திரை கலைஞர்கள் எதிர்ப்பு
நடிகர்கள் கமல், விஷால், கார்த்தி, இயக்குனர்கள் கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்ட பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமசாமி, நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெற மத்திய அரசிடம் வலியுறுத்தும்படி கோரிக்கை விடுத்தனர்.

முதல்வரிடம் நேரில் கோரிக்கை
இந்த நிலையில் ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா, மாநில அரசுகளின் அதிகாரங்களையும் குறைக்கிறது.

கூட்டாட்சிக்கு எதிராக
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இந்த சட்ட மசோதா இருக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய அதிகாரத்தையும் குறைக்கிறது. வயது வாரியாக சென்சார் சான்று வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications