4 “முதலமைச்சர்கள்”.. எடப்பாடி சொன்ன “வார்த்தை”! பாய்ண்டை பிடித்த ஸ்டாலின் - மேடையில் “விளாசல்”
சென்னை: தற்போது 4 முதலமைச்சர் ஆட்சி செய்வதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், நல்ல ஆலோசனைகளை வழங்கும் அனைவரது ஆட்சி இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநாடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், "இந்த ஆட்சியின் மீது இட்டுக்கட்டிய கதைகளை எல்லாம் அவதூறாக போட நினைக்கிறார்கள். இன்று அவர்கள் போடும் ஆர்ப்பாட்ட கோஷங்கள் எல்லாம் மக்களுக்கு தெரியாதா? மக்கள் புரிந்துகொள்ளாமலா உள்ளார்கள்?

என்றும் உங்களுடன்
எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் எப்போதும் உங்களோடு இருக்கக்கூடியவர்கள் நாங்கள். அதிகாரத்துக்கு வந்துவிட்ட காரணத்தால் விலகிவிட்டு செல்பவர்கள் அல்ல நாங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செல்லும் ஆலோசனைகளை, கோரிக்கைகளின் நியாயங்களை அறிந்து எந்தளவுக்கு செயல்படுத்துகிறோம் என்பது அவருக்கும் புரியும். உங்களுக்கும் புரியும்.

அதிமுக ஆட்சி
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னாரே.. அந்த ஆட்சிதான் இங்கு நடக்கிறது. இதை ஒரு கட்சியின் ஆட்சியாக கருத தேவையில்லை. இனத்தின் ஆட்சி என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால், சொந்த புத்தியும் இல்லாமல் சுயபுத்தியும் இல்லாமல் இருந்த கடந்த கால ஆட்சியை போன்றது அல்ல இந்த ஆட்சி.

திராவிட மாடல்
இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிட மாடல் என்ற பெரும் தத்துவம். இந்த திராவிட மாடல் ஆட்சி அனைவரும் விரும்பக்கூடிய ஆட்சியாக அனைவரின் ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட்டு உள்ளது. இன்னும் பல கோரிக்கைகள் உள்ளன. அதை நான் மறக்கவில்லை. மறைக்கவில்லை.

நிரந்தர ஆட்சி
உங்கள் கோரிக்கைகளை எந்தெந்த நிலையில் நிதி ஆதாயங்கள், சட்ட விதிகளை அடிப்படையாக வைத்து உறுதியாக நிறைவேற்றப்படும். நீங்கள் கவலைப்படாதீர்கள். இது உங்கள் ஆட்சி. இன்னும் சொல்லப்போனால் இது நிரந்தரமான ஆட்சி. என் மீதுள்ள இருமாப்பில் சொல்லவில்லை. உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் சொல்கிறேன்." என்றார்.
-
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications