சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. பெரும் மாற்றம்.. ஆளுநர் மாளிகைக்கு போன முதல்வர்! தேநீர் விருந்தில் பங்கேற்பு.. என்ன பேசினாங்க?

Google Oneindia Tamil News

சென்னை: 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் உட்பட ஆளும் திமுக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நாட்டின் 76வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார். நாடு முழுக்க மாநில தலைநகரங்களில் மாநில முதல்வர்கள் கொடி ஏற்றி மரியாதையை செய்தனர்.

சென்னை, கோட்டை கொத்தளத்தில் 2வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்.

அதன்பின் சுதந்திர தின விழாவில் பல்வேறு சாதனையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

இதான் சரியான நேரம்! உள்ளே புகுந்து கோட்டையை இதான் சரியான நேரம்! உள்ளே புகுந்து கோட்டையை

டீ பார்டி

டீ பார்டி

பொதுவாக குடியரசுத் தினம், சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தரப்படும். ஆளுநர் மூலம் அளிக்கப்படும் இந்த நிகழ்விற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட , சட்டபையில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் கடந்த குடியரசுத் தினத்தின் போது நடத்தப்பட்ட தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுகவினர் இதில் கலந்து கொள்ளவில்லை.

 குடியரசுத் தினம்

குடியரசுத் தினம்

கடந்த குடியரசுத் தின தேநீர் விருந்தை ஆளும் திமுக புறக்கணித்தது. விசிக, சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகளும் இந்த நிகழ்வை புறக்கணித்தன. ஆளுநர் ரவி நீட் தேர்வு மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை என்று கோபத்தால் ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இதை புறக்கணித்தன. மாறாக அதிமுக, பாஜக தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

 தேநீர் விருந்து

தேநீர் விருந்து

இந்த நிலையில் தற்போது 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் உட்பட ஆளும் திமுக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆளும் கட்சி அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் ஆளுநர் ரவி வரவேற்றார். இவர்கள் இருவரும் பேசியபடியே நடந்து வந்தனர்.

வேறு யார்

வேறு யார்

அதேபோல் . அமைச்சர்கள் மெய்யநாதன், அனிதா ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதிமுக, பாஜக தலைவர்கள் சற்று நேரத்தில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் ஆளுநர் ரவி கொடுக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழ்நாடு திமுக அரசு முடிவு செய்தது பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. ஆக்கபூர்வமான அரசியலாக இது பார்க்கப்படுகிறது.

English summary
Tamil Nadu CM Stalin participates in Governor R N Ravi on the day of Independence. 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X