Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. லோக்சபாவில் நிறைவேறிய மசோதாவுக்கு ஸ்டாலின் வரவேற்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

குருவிக்காரர், நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா

பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா

நாடாளுமன்ற மக்களவையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதாவை பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அறிமுகம் செய்த நிலையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இம்மசோதா வழிவகை செய்துள்ளது.

ஸ்டாலின் கடிதம்

ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர், நரிக்குறவர் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

குருவிக்காரர், நரிக்குறவர்

குருவிக்காரர், நரிக்குறவர்

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் செப்டம்பர் 14-ஆம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவையில் நிறைவேற்றம்

அடுத்தக்கட்டமாக இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும். அதன்பிறகு, தமிழகத்தின் திருத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், அரசின் தற்போதைய நலத் திட்டங்களின் பயன்களை பெற முடியும்.

முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

இந்நிலையில் பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நரிக்குறவர் & குருவிக்காரர் சமூகங்களை எஸ்.டி பட்டியலில் சேர்ப்பதற்காக நான் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

தொடர் முயற்சியின் விளைவாக

தொடர் முயற்சியின் விளைவாக

எங்களின் தொடர் முயற்சியின் விளைவாக, மக்களவையில் அதற்கான மசோதா குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். அந்தச் சமூகத்தினரின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+