முதல்வர் விஜய்க்காக வேகமாக ‘ரெடி’ ஆகும் அரசு பங்களா.. ஆர்.ஏ.புரம் இல்லத்துக்கு மாற திட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் விரைவில் வீடு மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலாங்கரை வீட்டில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு வருவது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதால், அவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு இல்லத்திற்கு மாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய் தினசரி தலைமைச் செயலகத்திற்கு காலை 10 மணிக்குச் செல்கிறார். மாலை வரை அலுவலகத்தில் இருந்து பல்வேறு துறையின் செயலாளர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். முதலமைச்சர் விஜய் தற்போது தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து தினசரி 17 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து தலைமைச் செயலகத்திற்கு வருகிறார்.

Vijay Chennai CM Vijay

முதலமைச்சர் விஜய்க்கு சொந்தமாக பட்டினப்பாக்கத்திலும் ஒரு வீடு உள்ளது. பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு சில சமயங்களில் மட்டுமே அலுவலக வேலைக்காக சென்று தங்கி வருகிறார் முதல்வர் விஜய். அதை அவர் முகாம் அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார். விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோர் அடையாறில் வசித்து வருகின்றனர்.

தினசரி நீலாங்கரையில் இருந்து முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வருவதால் இதற்காக நீண்ட நேரம் ஆகிறது. அவர் வரும் வழியில் பல இணைப்பு சாலைகள் உள்ளன. இதனால் அவர் வரும் வழியில் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சூழலும் உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கலைக் களைவதற்காக முதலமைச்சர் விஜய் வீடு மாற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் அமைந்துள்ள பசுமை வழிச்சாலை நகரின் மிக முக்கியமான விஐபி குடியிருப்புப் பகுதியாகும். முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் ஆகியோருக்கு ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச்சாலையில் அரசு சார்பில் பங்களாக்கள் உள்ளது. ஒவ்வொரு அரசின்போதும் அமைச்சர்கள் அந்தந்த பங்களாக்களில் இருந்து தலைமைச் செயலகம் வருவது வழக்கம்.

முதலமைச்சர் விஜய்யும் நீலாங்கரை இல்லத்தில் இருந்து பசுமை வழிச்சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு இடமாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேர விரயத்தை குறைக்கும் வகையிலும், எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் இருக்கும் வகையில் இதை முதலமைச்சர் விஜய் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்க்காக ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில், அரசு இல்லத்தை அதிகாரிகள் தேடி வந்தனர். தொல்காப்பிய பூங்காவுக்கு எதிரேயுள்ள பொதிகை வளாகத்தில் உள்ள அரசு இல்லத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதிகை வளாகம் அரசு இல்லம் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு வசித்த வீடு. ஏற்கனவே பாதுகாப்பு பலமாக உள்ள பகுதி என்பதாலும், தலைமைச் செயலகத்துக்கு உடனே சென்று வரும் வசதி இருப்பதாலும் அந்த வீட்டை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. காலியாக இருந்த அந்த வீட்டைப் புனரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும், போலீஸ் உயரதிகாரிகளும் அந்த இல்லத்தை சென்று பார்வையிட்டுள்ளனர். அந்த வீட்டின் சுற்றுப்புறச் சூழல், பாதுகாப்பு, போக்குவரத்து வசதி உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வீட்டை புனரமைத்த பிறகு அதை முதலமைச்சர் விஜய்யிடம் காட்ட அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அதை பார்த்த பிறகு முதலமைச்சர் விஜய் அங்கு இடம் மாறுவது குறித்து முடிவெடுப்பார் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+