என்னாச்சு.. தமிழகத்தில் கொரோனா கிடுகிடு உயர்வு.. அதுவும் இந்த 2 மாவட்டங்களில் நிலைமை சீரியஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா அதிகரிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறப்புகள் எண்ணிக்கை
இதனால் மொத்த பாதிப்பு 27,46,890 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 2 பேர் இறந்துள்ளனர். சென்னை, நெல்லையில் தலா ஒருவர் இறந்துள்ளனர், இதுவரை கொரோனாவுக்கு 36,765 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 608 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,03,196 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது.

சென்னையில் ஜெட் வேகம்
6,929 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,05,058 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,64,00,225 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 397 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டிலும் தொற்று கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

2 மாவட்டங்களில் சதம்
கோவையில் 91 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 103 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 24 பேருக்கும், மதுரையில் 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 13 பேருக்கும், திருவள்ளூரில் 35 பேருக்கும், திருச்சியில் 9 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 28 பேருக்கும், ஈரோட்டில் 27 பேருக்கும், சேலத்தில் 26 பேருக்கும், நாமக்கல்லில் 12 பேருக்கும், தஞ்சாவூரில் 10 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications