பாட்டி கையெழுத்து போடுங்க... அப்படித்தான்... சிலேட்டில் கற்றுக்கொடுத்த கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
சிறு பிள்ளைகள் மட்டுமல்லாது வயதானவர்களும் எழுதப்படிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் எழுதப் படிக்க தெரியாதவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்துவதே அதிகாரிகள், ஆசிரியர்
சென்னை: பாட்டி வாங்க வந்து கையெழுத்து போடுங்க என்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது கையில் சிலேட் ஒன்றை வாங்கி அதில் எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார்.
தமிழகத்தில் எழுதப் படிக்க தெரியாதவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்துவதே அதிகாரிகள், ஆசிரியர்களின் இலக்காய் இருக்க வேண்டும் என்றும் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
அமைச்சரிடம் கையெழுத்து போட கற்றுக்கொண்ட பாட்டியின் பெயர் அஞ்சலை. 65 வயதாகும் அந்த பாட்டி நூறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகிறார். அந்த பாட்டிக்கு எழுதப்படிக்க தெரியாது என்றாலும் எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தது. அதற்கு ஏற்றார் போல அவருக்கு வாய்ப்பும் வந்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடமே அவர் கையெழுத்து போட கற்றுக்கொண்டு விட்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடியில் 100 சதவீதம் கல்வி என்ற இலக்கை நோக்கி எழுத்தறிவு இயக்கத்தின் தொடக்க விழாவைத் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். இதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், ஒவ்வொரு இடத்திலும் கற்பிக்கும் பணியினை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், தன்னார்வ அமைப்பினர் ஒருங்கிணைந்து நடத்த உள்ளனர் என்று கூறியுள்ளார்.

கையெழுத்து
மணிகண்டம் ஒன்றியத்தில் 2021யின் மக்கள் தொகையின் கணக்கின்படி 14,89,977 நபர்கள் உள்ளனர். அவர்கள் கையெழுத்துப் போடுவதற்கே எழுத்தறிவு இல்லாதவர்கள் 4599 நபர்கள் பெண்கள் 3576, ஆண்கள் 913 பேர் உள்ளனர். முதலில் அவர்கள் கையெழுத்துப் போடுவதற்கும் பின்னர் படிக்கவும் 69 நாட்களில் இலக்காகக் கொண்டு செயல்படுத்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் ஒரு கோடி நபர்கள் இவ்வியக்கத்தினால் பயன்பெற இருக்கிறார்கள், இதனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாட்டியை பார்த்து ஆச்சரியம்
எழுத்தறிவு இயக்க தொடக்க விழாவின் போது அங்கு வந்த அஞ்சலை என்ற பாட்டியிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அவரது சிலேட்டை வாங்கி பெயரை எழுதிக்கொடுத்தார். இந்த வயதிலும் படிக்க வேண்டும் என்று நீங்கள் இங்கு வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறி அஞ்சலை என்று சிலேட்டில் எழுதினார்.

பாட்டிக்கு கையெழுத்து
தமிழில் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை முதலில் எழுதுங்கள். பின்னர் படிப்படியாக எழுத கற்றுக்கொள்ளலாம் என்று கூறி சில மணி நேரத்தில் பாட்டியின் முழு பெயரையும் எழுதக் கற்றுக்கொடுத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ். அமைச்சரிடம் பல மூதாட்டிகள் ஆர்வத்துடன் வந்து எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டனர். பாட்டிகளிடம் பேசிய அமைச்சர், எழுத, படிக்க கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு பாதுகாப்பளிக்கும் அதோடு தைரியத்தையும் வளர்க்கும் என்றார்.

தமிழகத்தில் எழுத்தறிவு இயக்கம்
கொரோனா பரவல் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்காக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆடியோ, வீடியோ, அனிமேஷன் கல்வி தொலைக்காட்சி புது வடிவம் எடுத்துள்ளது. தற்போது எழுத்தறிவு இயக்கத்தையும் பிரபலப்படுத்தி அனைவரும் எழுதப்படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று முழு முயற்சியுடன் களமிறங்கியுள்ளார்.

ஆசிரியர்களின் இலக்கு
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த திட்டத்தினை முறையாக செயல்படுத்தி, தமிழகத்தில் எழுதப் படிக்க தெரியாதவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்துவதே அதிகாரிகள், ஆசிரியர்களின் இலக்காய் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எம்ஜிஆர் ஸ்டைல்
அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆருக்கு குழந்தைகள், பாட்டிகள் என்றால் மிகவும் பிடிக்கும். பொது இடங்களில் மூதாட்டிகளின் கைகளைப் பிடித்து பேசுவார். அதே பாணியை பின்பற்றி பாட்டிகளுக்கு எளிதாக எழுதப்படிக்க கற்றுக்கொடுத்துள்ளார் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications