Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, வரும் முப்பதாம் தேதி வேட்பமனு தாக்கல் தொடங்க உள்ளது. இந்நிலையில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுமே தங்களுடைய கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை கிட்டத்தட்ட முடித்து விட்டன. தற்போது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

கடைசி வரை இழுபறி நீடித்து வந்த அதிமுக முகாமில் தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிக்கப்பட்டு தற்போது அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கிவிட்டன. என்டிஏ கூட்டணியில் அதிமுக பாஜகவிற்கு 27 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தெற்கு மண்டலத்தில் அதிகப்படியான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Edappadi Palaniswami

பாஜகவின் 27 தொகுதிகள்

பாஜக சென்னையிலும் மேற்கு மண்டலத்திலும் வலுவான செல்வாக்கை கொண்டுள்ளது. அதேபோல் தெற்கு மண்டலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக மிகவலுவாக உள்ளது. ஆனால் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் அடிப்படையில் பார்த்தால் மேற்கு மண்டலம் மற்றும் சென்னை மண்டலத்தை விட தெற்கு மண்டலத்தில் பாஜகவிற்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எந்த மண்டலத்தில் எவ்வளவு?

அதாவது பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தெற்கு மண்டலத்தில் 12 தொகுதிகளும் சென்னையில் மயிலாப்பூர், ஆவடி என இரண்டு தொகுதிகளும், மேற்கு மண்டலத்தில் ஏழு தொகுதிகளும், மத்திய மண்டலம் எனப்படும் திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ளடக்கிய மாவட்டங்களில் ஆறு தொகுதிகளும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தெற்கு மண்டலத்தில் பாஜக

அதிமுக இந்த தேர்தலில் 160 அல்லது 165 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்குலத்தோருக்கு எதிரான மனநிலை அதிமுகவில் நிலவுவதால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோரின் வாக்குகளை பெற முடியாதோ என்ற அச்சத்தில் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு தெற்கு மண்டலத்தில் அதிகப்படியான தொகுதிகளை ஒதுக்கி உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

முக்குலத்தோர் வாக்குகள்

அதிலும் எடப்பாடி மீதான முக்குலத்தோருக்கு எதிர்மறை மனநிலை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். கடைசிவரை எவ்வளவு போராடியும் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்வதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை.

டிடிவி தினகரனை சேர்த்தது ஏன்?

இந்த இரு காரணங்களால் தெற்கு மண்டலத்தில் முக்குலத்தோரின் வாக்குகளை பெறுவது அவ்வளவு எளிதல்ல என எடப்பாடி பழனிசாமி யோசித்து இருக்கிறாரோ என்னவோ? தெற்கு மாவட்டங்களில் அதிமுக வலுவிழந்து இருக்கும் நிலையில், முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து தான் டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணியில் சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளார்.

ரிஸ்க் எடுக்க விரும்பாத எடப்பாடி

ஆனால் டிடிவி தினகரன் என்ற ஒற்றை ஆளால் இந்த கூட்டணிக்கு, குறிப்பாக அதிமுகவிற்கு எந்த அளவு பலன் கிடைக்கும் என கணக்கு போட்டு பார்த்த எடப்பாடி பழனிசாமி ரிஸ்க் எடுக்க விரும்பாமல் தெற்கு மண்டலத்தில் அதிமுக நேரடியாக களம் காண்பதை ஓரளவு குறைத்துக் கொள்ளும் நோக்கத்தோடு, பாஜகவிற்கு தெற்கு மண்டலத்தில் அதிகபட்ச தொகுதிகளை ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக வரும் தேர்தலில் 160 முதல் 170 வரை உள்ள இடங்களில் போட்டியிட்டாலும், 80 விழுக்காடு தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தனி பெரும்பான்மை பெற முடியும்.

எடப்பாடியின் சேஃப் கேம்

அதனால் வெற்றி வாய்ப்பிற்கான சந்தேகம் உள்ள தெற்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் இரட்டை இலை போட்டியிடுவதை தவிர்ப்பதற்காகவே பாஜகவிற்கு தெற்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை எடப்பாடி ஒதுக்கி சேஃப்டி கேம் ஆடுகிறார் என விமர்சிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் கணக்கு அவர் போட்டு வைத்திருக்கும் விடைக்கு இணையாக வருமா என்பது மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரியவரும்.

- சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+