சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசர வைத்த "10 அமைச்சர்கள்".. அதிலும் 2 தொகுதியில் "செம".. வளைத்து வளைத்து குத்திய வாக்காளர்கள்

10 அமைச்சர்களின் தொகுதிகளில் 80 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: மொத்தம் 10 அமைச்சர்களின் தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவு விவரங்கள் வெளியாகி உள்ளன.. இதை பார்த்து திமுக மலைத்து போய் உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது.. வெயில் காலம் என்பதால், காலையிலேயே மக்கள் திரண்டு ஓட்டு போட ஆரம்பித்துவிட்டனர்.. மேலும் கொரோனா காலகட்டம் என்பதால் மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வந்து ஓட்டு போட்டுவிட்டு போனார்கள்.

 மத்திய அரசின் பிடிவாத போக்கு.. நாடு பேரழிவை சந்திக்க போகிறது.. ப. சிதம்பரம் கடும் வார்னிங் மத்திய அரசின் பிடிவாத போக்கு.. நாடு பேரழிவை சந்திக்க போகிறது.. ப. சிதம்பரம் கடும் வார்னிங்

அதனால், எந்தவித சட்டம் - ஒழுங்கு பிரச்சனையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனாலும் கடந்த முறையை விட இந்த முறை குறைவுதான். பிரச்சார சமயங்களில் எத்தனையோ இடங்களில் பணப்பட்டுவாடாக்கள் நடந்தன.. அவைகளில் பல கையும் களவுமாக பிடிபட்டன.. வீடியோக்களும் வெளிவந்தன.. பணப்பட்டுவாடா நடந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில், எங்கே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுவிடுமோ என்றுகூட அச்சம் எழுந்தன.

 புறக்கணிப்பு

புறக்கணிப்பு

அப்படி எதுவுமே நடக்கவில்லை.. மாறாக, மக்களே இதை புறக்கணித்துவிட்டார்களோ என்றுகூட தெரிகிறது.. அதாவது, கோவையில் எல்லா தொகுதிகளிலுமே, பணம் ஆறாக பாய்ந்ததாக புகார்கள் வந்தன.. ஒரு கட்சி 1000 ரூபாய் என்றால், இன்னொரு கட்சி 500 ரூபாய் என்று விநியோகம் ஆனதாகவும் சொல்லப்பட்டது... அதனால் இந்த கோவை மண்டலத்தில் எப்படியும் ஏகப்பட்ட ஓட்டுக்கள் பதிவாகும் என்று கணிக்கப்பட்டது. அதற்கு தகுந்தபடி ஓட்டுப்பதிவும் தாறுமாறாக அதிகரிக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

 வித்தியாசம்

வித்தியாசம்

கோவை வடக்கில், முந்தைய தேர்தலில் 61.72 சதவீதமாக இருந்த ஓட்டுப்பதிவு, இந்த தேர்தலில் 59.08 ஆக குறைந்துவிட்டது.. வால்பாறையில் இந்த முறை 2 சதவீதம் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது... மற்ற தொகுதிகளில், ஒரு சதவீதத்துக்கும் குறைவான வித்தியாசமே உள்ளது... பணத்தை வாரி இறைத்தும் அந்த அளவுக்கு பலன் இல்லை என்பதே இதன்மூலம் தெரியவருகிறது.

 ஸ்டார் தொகுதி

ஸ்டார் தொகுதி

அதேபோல, சில ஸ்டார் தொகுதிகளில் வாக்குப்பதிவு சிறப்பாக அமைந்தன.. குறிப்பாக, 10 அமைச்சர்களின் தொகுதிகளில் நல்ல வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது.. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 76.91 சதவீதம் வாக்குப்பதிவானது. ஈரோடு கிழக்கில் 66.24 சதவீதமும், ஈரோடு மேற்கு தொகுதியில் 69.36 சதவீதமும், மொடக்குறிச்சி தொகுதியில் 75. 26 சதவீதமும், பவானிசாகரில் 77.37 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

 பெருந்துறை

பெருந்துறை

அமைச்சர் கேசி கருப்பணன் போட்டியிடும் பவானி தொகுதியில் மாவட்டத்தில் அதிக பட்சமாக 83.50 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.. அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடும் கோபி தொகுதியில் 82.52 சதவீத வாக்குகளும் பதிவாயின. அதேபோல, பெருந்துறை தொகுதியில் 82.60 சதவீத வாக்குகளும், அந்தியூரில் 79.69 சதவீத வாக்குகளும் பதிவாகின. தொண்டாமுத்துார் தொகுதியில் கடந்த 2016ல் 66.96 சதவீதமாக இருந்த ஓட்டுப்பதிவு, இந்த தேர்தலில் 71.04 சதவீதமாக அதிகரித்துள்ளது...

 விராலிமலை

விராலிமலை

விராலிமலை விஜயபாஸ்கர் தொகுதியில் 85.4 சதவீதமும், எம்ஆர் விஜயபாஸ்கரின் கரூர் தொகுதியில் 83.5 சதவீத வாக்குப்பதிவும் உள்ளன.. ராசிபுரம் சரோஜா 82.1 சதவீதம், ஆர்.காமராஜ் நன்னிலம் தொகுதியில் 82 சதவீதம் வாக்குப்பதிவும், ஓஎஸ் மணியன் தொகுதியில் 80.6 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் எடப்பாடி தொகுதி அசத்திவிட்டது.. 85.6 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. இதில், ஈரோட்டில் 2 அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகள் உட்பட 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு 80 சதவீதத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்..

தெளிவு

தெளிவு

ஆக மொத்தம், வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக உள்ள தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்ற ஆவல் எழுந்து வருகிறது.. அதேபோல, பணப்பட்டுவாடா நடந்த தொகுதிகளில் வாக்குகள் சதவீதம் எந்தவிதத்திலும் உயரவில்லை என்பதும் தெளிவாகிறது.. ஓட்டுக்கு பணத்தை வாரி இறைத்தாலும் சரி, இனி அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதும், மக்களின் தெளிவு கூர்மையாகி கொண்டே போகிறது என்பதும்தான், இந்த தேர்தல் நமக்கு புரிய வைத்து வருகிறது..!

English summary
TN Election: Over80% Voter turnout in 10 ministers constitutions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X