கோவையில் ரயில் மோதி.. 3 யானைகள் உயிரிழந்த விவகாரம்.. ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
சென்னை: கோவையில் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் துணை ரயில் ஓட்டுநர் மீது தமிழக வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில் ஓட்டுநர் சுபயர், துணை ஓட்டுநர் அகில் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மதுக்கரை வனச்சரகம் அருகே தமிழகம் - கேரளாவை இணைக்கும் வகையில் இரண்டு இரயில் பாதைகள் உள்ளன. இதில் நேற்றிரவு முதலாம் பாதையில் மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் மோதியதில் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை உட்பட 3 யாநைகள பரிதாபமாக உயிரிழந்தன.
ரயில் மோதி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 யானைகள் ஒரே சம்பவத்தில் உயிரிழந்தது சமூக ஆர்வகள்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 யானைகள்
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம் அருகே க.க.சாவடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நவக்கரை பகுதியில் ரயில் பாதை செல்கிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ரயில் பாதையைக் கடக்க முயன்ற 3 யானைகள் மீது மங்களூர் -- சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 12602) மோதியது. ரயில் இன்ஜினில் சிக்கிப் படுகாயமடைந்து இந்த 3 யானைகள் அடுத்தடுத்து சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தன.

கருவுற்ற பெண் யானை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ரயில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரிடம் விசாரணை நடத்தினர். மேலும், யானைகளின் உடல்களைக் காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்று உடற்கூராய்வு நடத்தினர். , 25 வயதான பெண் யானை, 6 வயதான குட்டியானை மற்றும் 18 வயதுடைய மக்னா யானை இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது. உயிரிழந்த பெண் யானை கருவுற்று இருந்ததும் உடற்கூராய்வில் தெரிய வந்தது.

சமூக ஆர்வலர்கள்
ஒரே நேரத்தில் கருவுற்று இருந்த யானை உட்பட 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அது வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் இடம் எனத் தெரிந்தும் அலட்சியமாக ரயிலை வேகமாக இயக்கியதாலேயே இந்த விபத்திற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் இதே தவறு மீண்டும் நடைபெறாது என வலியுறுத்தினர்.

தமிழக அதிகாரிகள் சிறைபிடிப்பு
மேலும் இது குறித்து விசாரணை செய்யத் தமிழக வனத்துறையைச் சேர்ந்த இரண்டு வனவர்கள் உட்பட 6 பேர் கேரளா சென்ற நிலையில், அவர்களைக் கேரள ரயில்வே அதிகாரிகள் பாலக்காட்டில் சிறைபிடித்ததாகவும் தகவல் வெளியானது. ரயில் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்றும் ரயில் எஞ்சினில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்பீடோ மீட்டரை தரும்படியும் தமிழக வனத்துறை அதிகாரிகளைக் கேரள ரயில்வே அதிகாரிகள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது

வழக்குப்பதிவு
இந்தச் சூழலில் யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் துணை ரயில் ஓட்டுநர் மீது தமிழக வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில் ஓட்டுநர் சுபயர், துணை ஓட்டுநர் அகில் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications