சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"போட்றா வெடியை".. காவல் துறையினருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!

தமிழக காவல்துறைக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றி வரும் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும், தமிழக அரசு ஊக்க தொகையாக 5000 ரூபாய் அறிவித்துள்ளது.

Recommended Video

    கருணாநிதி பிறந்தநாளில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் மற்றும் நலத்திட்டங்களால் பயனடைந்தவர்கள் பேட்டி

    இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள்.. இதனை தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாடி வருகின்றனர்.

    தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

    மேலும், கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக அரசு பல்வேறு நலதிட்டங்களையும், சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

    காவல்துறை

    காவல்துறை

    அதன்படி, காவல்துறைக்கு ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. கொரோனா முதல் அலையில் இருந்து முன்களப்பணியாளர்களாக அரும்பணியாற்றி வரும் அனைத்து காவல்துறையினருக்கும் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது... இதுகுறித்து தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கையும் வெளியாகி உள்ளது.

     கடமை

    கடமை

    அதில், ''கோவிட்-19 பெருந்தொற்று, உலகளவில் மட்டுமல்ல இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கோவிட் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் காரணமாக காவல்துறைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு முன்களப் பணியாளர்கள் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.

     ஊக்கத்தொகை

    ஊக்கத்தொகை

    அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் காவல்துறையைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல் துறையினருக்கு ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) வீதம் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     வரவேற்பு

    வரவேற்பு

    பதவியேற்றது முதல், ஏராளமான திட்டங்களை, அறிவிப்புகளை வெளியிட்டு பல்வேறு தரப்பினரை முதல்வர் மகிழ்வித்து வருகிறார்.. மற்றொரு பக்கம் கொரோனா தடுப்பு பணிகளையும் சிறப்பாக கையாண்டு வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில், காவல்துறைக்கும் முக்கியத்துவம் தந்து, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, கூடுதல் மகிழ்ச்சியை போலீசாருக்கு ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    TN gov has announced an Incentive of Rs 5000 for the police Dep
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X