சென்னை மெரினா பீச்சே மாறப்போகுது.. கருணாநிதி பெயரில் பாய்மர படகு அகாடமி.. அனுமதி கோரியது தமிழக அரசு!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி அமைக்க தமிழக அரசு வேலைகளைத் தொடங்கியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு விளையாட்டு அகாடமி ஒன்றை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அகாடமி மற்றும் திறன்மிகு பயிற்சி மையம் ரூ.7 கோடி செலவில், கூவம் முகத்துவார பகுதியில் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் அளித்து வருகிறது தமிழக அரசு. சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில், பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்தல், பன்னாட்டு தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தலில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு விளையாட்டு அகாடமி அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் பாய்மர படகு அகாடமி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு மெரினா கடற்கரையில் படகு இல்லம் இருந்த இடத்தில் பாய்மரப் படகு அகாடமி அமைய உள்ளது.
2 தளங்கள் கொண்ட கட்டிடமாக பாய்மர படகு அகாடமி கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications