சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதாரண கட்டண பஸ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நற்செய்தி... வசூல்படி இரட்டிப்பாக்கி தமிழக அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சாதாரண கட்டண பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் வாக்குறுதியாக தமிழகம் முழுவதும் உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் செய்யும் வசதி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

23 பாயிண்டுகள்! அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த அறிக்கையின் முழுவிபரம்! 23 பாயிண்டுகள்! அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த அறிக்கையின் முழுவிபரம்!

வசூல் படி குறைந்தது

வசூல் படி குறைந்தது

இதையடுத்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சாதாரண கட்டண நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் தினம் தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சாதாரண கட்டண நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிப்பதால் அந்த பஸ்களை இயக்கும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கான வசூல்படி வெகுவாக குறைந்தது.

வசூல்படி இரட்டிப்பு

வசூல்படி இரட்டிப்பு

இதுபற்றி அரசின் கவனத்துக்கு தொழிற்சங்கங்கள் மூலம் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கொண்டு சென்றனர். இதுபற்றி அரசும் பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் தான் அந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படியை உயர்த்தி வழக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், சாதாரண கட்டண நகர பஸ்களின் ஓட்டுனர், நடத்துனர்களின் வசூல்படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

4 கட்ட பேச்சுவார்த்தை

4 கட்ட பேச்சுவார்த்தை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின், 4-வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த மே 12-ந் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் கே.கோபால் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டாவை நிர்ணயம் செய்திட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

வசூல்படி குறைவை ஈடுசெய்ய...

வசூல்படி குறைவை ஈடுசெய்ய...

அதன்படி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பஸ்களில் பெண்கள் இலவச பஸ் பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து ஓட்டுனர், நடத்துனர்கள் பெற்று வந்த வசூல்படி குறைவினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu government has announced that drivers and conductor of ordinary fare buses traveling free of charge for woman will be given double the collection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X