இதைதவிர வேறுவழியில்லை.. தமிழக அரசு அதிரடி.. எதற்கெல்லாம் எவ்வளவு அபராதம்.. பாருங்க
சென்னை: கொரோனா கால விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தமிழக அரசின் அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் படி இனி தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊரடங்கில் நிறைய தளர்வு அளித்து கிட்டத்தட்ட இயல்புநிலை என்கிற அளவுக்கு நிலைமை மாறி உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் ஒவ்வொருவரும் வெளியில் செல்லும் போதும், ஒருவருக்கு ஒருவர் பேசும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டியது அவசியம் ஆகும்.
அத்துடன் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்றும் கூட்டம் கூடுவது அறவே கூடாது என்றும் எச்சரித்து வருகிறது. ஆனால் அரசின் அறிவிப்புகளை பலர் காற்றில் பறக்கவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

தமிழ அரசு
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகள் எடுத்த அரசு இறுதியாக அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டம் கொரோனா கால விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது.

தனி மனித இடைவெளி
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி, பொது இடங்களில் முககவசம் (மாஸ்க்) அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

தனிமைப்படுத்துதல் விதிமுறை
பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் என்று தமிழக அரசு அரசாணையில் கூறியுள்ளது.
இதேபோல் கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கடைகளுக்கு 5000 அபராதம்
தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத சலூன், ஸ்பா, கடைகள், ஜிம் ஆகியவற்றுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத தனிநபர்களுக்கு 500 ரூபாய் அபாதம் விதிக்கப்படும் என்றும், பொதுவணிக நிறுவனங்கள் அல்லது வாகனங்கள் பின்பற்றாவிட்டால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications