நிர்வாக விஷயங்களில் தவறும் தவெக அரசு! முக்கிய தகவல்களை பதியாமல் தாமதம்! இதெல்லாம் சரியே இல்லை!
சென்னை: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு (NDMA), தமிழ்நாடு அரசு அக்.16 தொடங்கி அக்.26 வரை 10 நாட்களுக்கு தினசரி சூழ்நிலை அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியிருக்கிறது. இது மாநிலத்தின் பேரிடர் தயார் நிலை குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
பருவமழை காலத்தில், தமிழ்நாட்டில் ஏற்படும் பாதிப்புகளை மத்திய அரசு இந்த அறிக்கையை பார்த்துதான் தெரிந்துக்கொள்ளும். அதன் அடிப்படையில்தான் மீட்பு படைகளை அனுப்ப வேண்டுமா? என்பதை முடிவு செய்யும். இவ்வளவு சீரியஸான மேட்டரில்.. ஏன் தமிழ்நாடு அரசு ஏன் தவறுகிறது? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

ஒரு மாநிலத்தில் பேரிடர் காலங்களில் என்ன நடக்கிறது? தற்போதைய பாதிப்பு என்ன? என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் முதன்மை ஆவணம்தான்.. இந்த தினசரி சூழ்நிலை அறிக்கை ஆகும். இந்த அறிக்கை இல்லாத போது, டெல்லியில் இருக்கும் நேஷனல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி அமைப்பு (NDMA), தமிழகத்தின் தற்போதைய கள நிலவரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடியாமல் போகும்.
தமிழகத்தில் எங்கு அதிக பாதிப்பு உள்ளது? எந்த மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்பு படைகள் தேவை? என்பதை இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே மத்திய உள்துறை அமைச்சகமும்.. தேசிய பேரிடர் மீட்பு படையும் தீர்மானிக்கும். மாநில அரசு, அறிக்கை அளிக்க தவறும் போது.. அவசர காலங்களில் கூடுதல் படைகளை உடனடியாக அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம்.
Important: TN GOVT Fails to Submit Daily situation Reports to NDMA ICR-ER for 10 Days (OCT 16 - OCT 26)Daily situation is uploaded to athttps://t.co/KNm8UvM1eKThe report listsNil reports received StatesReport received from Statesreports not received from statesAccording to the website, TN Govt has not submitted daily report for the past 10 days
— Kannan Jeevanantham (JK) (@Im_kannanj) October 28, 2026
பாதிப்புகள் மற்றும் தேவைகள் குறித்த முழுமையான தினசரி அறிக்கைகள் பதிவு செய்யப்படாவிட்டால், பேரிடருக்கு பிந்தைய சேத மதிப்பீட்டை கணக்கிடுவதிலும், மத்திய அரசிடம் இருந்து அவசர கால பேரிடர் நிவாரண நிதியை பெறுவதிலும், சட்ட ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகள் ஏற்படும். அதேபோல, மத்திய நீர் ஆணையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கும் வெள்ள எச்சரிக்கைகளுக்கு, மாநில அரசு கள அளவில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது? என்பதை இந்த அறிக்கை தான் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும்.
இவ்வளவு முக்கியமான அறிக்கையை, 10 நாட்களாக தராதது.. மாநில அரசின் பேரிடர் தயார் நிலை குறித்த கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அக்டோபர் மாத இறுதியில், வங்க கடலில் புயல் சின்னங்கள் மற்றும் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கைகள் இருக்கும் சூழலில்.. இதுபோன்ற அறிக்கைகளை சமர்ப்பிக்காமல் இருப்பது நிர்வாக அலட்சியமாக கருதப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.


Click it and Unblock the Notifications
