சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜனவரி 3 முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும்.. அரசு அறிவிப்பு.. 21 பொருட்கள் என்னென்ன?

Google Oneindia Tamil News

சென்னை: ரேஷன் கடைகளில் ஜனவரி 3-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறப்பு தொகுப்பு அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

21 பொருட்கள் என்னென்ன?

21 பொருட்கள் என்னென்ன?

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன. 1,088 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு அறிவிப்பு

இதேபோல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் ஜனவரி 3-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 டோக்கன் முறையில்...

டோக்கன் முறையில்...

சிறப்பு தொகுப்பு அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி காலை முதல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறை கொண்டு வரப்பட்டு சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

எதிர்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு

எதிர்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு

கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு தொகுப்பு பொருட்களுடன் ரூ.2,000 ரொக்க பணமும் வழங்கப்பட்டது. இந்த முறை சிறப்பு தொகுப்பு பொருட்களுடன் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தற்போது ஜனவரி 3-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் ரொக்க பணம் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Tamil Nadu government has announced that the Pongal special package will be available in ration shops from January 3. District Collectors have been instructed to ensure that the special package is provided to all
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X