சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதெல்லாம் நடக்க விட மாட்டார்கள்.. வல்லுநர்களை கொண்டு வந்த இ.பி.எஸ்.. நிவருக்கு தயாராகும் தமிழகம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தை நிவர் புயல் தாக்க உள்ள நிலையில், தமிழக அரசு தற்போது போதுமான அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Recommended Video

    'நிவர்' முன்னெச்சரிக்கை: முதல்வர் அதிரடி ஆய்வு!

    தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருமாறி உள்ள நிலையில் தற்போது தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் உருவாகி இருக்கும் இந்த புயலுக்கு நிவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் அருகே இந்த புயல் கரையை கடக்க உள்ளது.

    புயல் பலவீனமடைய வாய்ப்பு இல்லை.. சென்னையில் மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் புயல் பலவீனமடைய வாய்ப்பு இல்லை.. சென்னையில் மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

    எப்படி

    எப்படி

    இந்த புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை சுற்றி இருக்கும் அண்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இருக்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    தமிழகம்

    தமிழகம்

    தமிழகத்தில் இந்த புயல் காரணமாக பலத்த சேதங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எங்கே 2015 வெள்ளம் போல சென்னையில் பாதிப்பு ஏற்படுமோ என்றும் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த முறை அப்படி எல்லாம் நடக்க விட மாட்டார்கள், அரசு புயலுக்கு ஏற்றபடி முறையாக தயாராகி வருகிறது. இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

    முன்னெச்சரிக்கை

    முன்னெச்சரிக்கை

    தமிழகம் இதற்கு முன் வந்த இரண்டு புயல்களுக்கு முறையாக தயார் ஆகி இருந்த நிலையில் தற்போது நிவர் புயலுக்கும் தயாராகி வருகிறது. முறையான திட்டமிடல் மற்றும் வல்லுநர் குழு உதவியுடன் இந்த முறை தமிழக அரசு புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. நேற்றே இதற்காக முதல்வர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி இருந்தார்.

    மாவட்ட ஆட்சியர்கள்

    மாவட்ட ஆட்சியர்கள்

    மாவட்ட ஆட்சியர்கள் உடன் இது தொடர்பாக நேற்றே முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்து இருந்தார். இன்னொரு பக்கம் தலைமைச்செயலாளர் சண்முகமும் இது தொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை செய்து அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தார். இந்த நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் பேரிடர் தடுப்பு பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார்.

    சென்னை

    சென்னை

    சென்னைக்கு மட்டும் தனியாக குழு அமைத்து தீவிரமாக கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. சென்னையில் இருக்கும் ஏரிகள் எல்லாம் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து அடையாருக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது.

    ஏற்படாது

    ஏற்படாது

    தமிழகம் முழுக்க மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. முக்கியமாக சென்னையிலும், நாகை மாவட்ட கடலோர பகுதிகளிலும் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் புயல் வந்தாலும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தமிழக அரசு இருக்கிறது.

    எதிர்கொண்டு உள்ளது

    எதிர்கொண்டு உள்ளது

    இதற்கு முன் பல்வேறு புயல்களை தமிழகம் எதிர்கொண்டு உள்ளது. மோசமான பேரிடர்கள் தமிழகத்தை தாக்கி உள்ளது. இதில் இருந்தெல்லாம் தமிழகம் மீண்டு வந்துள்ளது. இந்த நிலையில் நிவர் புயலில் இருந்தும் தமிழகம் மீண்டு வரும்.. பெரிய பாதிப்பு எதுவும் ஏற்பட அதிகாரிகளும், அரசும் விட மாட்டார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

    English summary
    TN Govt prepares for all case scenario due to Nivar Storm in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X