பொதுக்கூட்டம் நடத்த ரூ.20 லட்சம் டெபாசிட் கட்டணும்.. தமிழக அரசின் புதிய நெறிமுறைகள்!
சென்னை: தமிழகத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு டெபாசிட் தொகை வசூலிப்பது,3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்குவது என முடிவு செய்துள்ளதாக சென்னையில் இன்று நடந்த அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கரூர் கூட்ட நெரிசல்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை, அரசியல் கட்சிகளின் சாலை பிரச்சாரம், ரோடு ஷோக்களுக்கு அனுமதி இல்லை என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க ஆணையிட்டு இருந்தது.
அண்மையில் இந்த வழக்கின் விசாரணையின்போது வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை ரோடு ஷோக்களுக்கு அனுமதி இல்லை. அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துகளை பெற்று விரைவில் விதிமுறைகள் வகுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
ஐகோர்ட் ஆணை
இதையடுத்து, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ரோடு ஷோ தொடர்பான விதிமுறைகள் வகுப்பதை அரசு விரைந்து முடிக்க வேண்டும், 10 நாட்களில் விதிகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து இன்று (நவம்பர் 6) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்துக் கட்சி கூட்டம்
அமைச்சர்கள் நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நடந்தது. இதனையடுத்து ஆலோசனைகளின் படி வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை ஆபத்துக்களை பொறுத்து மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. குறைந்த ஆபத்து
2. மிதமான ஆபத்து
3. அதிக ஆபத்து
குறைந்த ஆபத்து என்றால் 200 பேருக்கு ஒரு காவலர். மிதமான ஆபத்து என்றால் நூறு பேருக்கு ஒரு காவலர், அதிக ஆபத்து என்றால் 50 பேருக்கு ஒரு காவலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டத்தில் 5000 பேர் முதல் 10,000 பேர் கலந்து கொள்வதாக இருந்தால் 1 லட்சம் ரூபாய் டெபாசிட், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் என்றால் 3 லட்சம் ரூபாய் பெடாசிட், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான மக்கள் கலந்து கொள்வதாக இருந்தால் 8 லட்சம் வரை டெபாசிட், 50 ஆயிரம் பேருக்கு மேல் 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு 10 நாட்கள் முன்பாகவும் 15 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத மற்ற இடத்திற்கு 21 நாட்கள் முன்பாகவும் 30 நாட்களுக்கு மிகாமலும் மனு கொடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும்.
எழுத்துப்பூர்வ உறுதிமொழி
நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்திற்குள் நடத்த வேண்டும்.
கூட்டத்தினரின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு முறைக்கு அமைப்பாளர்கள் பொறுப்பு ஏற்பு.
பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு ஏற்று அதற்கான இழப்பீட்டை வழங்குதல்.
அவசரகால ஊர்திகள் இடையூறின்றி செல்வதற்கு வழி உறுதிப்படுத்துதல்
பொது மக்களுக்கு இடையூறுயின்றி வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்தி வைப்பதை உறுதி செய்தல்.
கர்ப்பிணி பெண்கள் மூத்த குடிமக்கள் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இட ஒதுக்கி அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ரோடு ஷோ தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள கருத்துகள்
ரோடு ஷோ நடத்த உள்ள வழித்தடம் உரை நிகழ்த்த உள்ள இடம் குறிப்பிடப்பட வேண்டும்.
துவங்கும் இடத்திற்கும் முடிவு வரும் இடத்திற்கும் சிறப்பு விருந்தினர் வருகை தரக்கூடிய நேரம்.
உரை நிகழ்த்தும் இடத்திலும் வழித்தடத்திலும் எதிர்பார்க்கப்படும் கூட்டம்.
சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அல்லது மாநில நெடுஞ்சாலைத் துறை அல்லது உள்ளாட்சி அமைப்புடன் இருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி
ரோடு ஷோ நடத்துவதற்கு கூடுதல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
சிறப்பு அழைப்பாளர் பேசும் இடத்தில் இருந்து 500 அடி தூரத்திற்கு தடுப்பு அமைப்பாளரே செய்தல் வேண்டும்.
அவசர சேவைகள், பொதுமக்கள் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரை நிகழ்த்த வேண்டும், வழியில் வேறு எங்கு உரை நிகழ்த்தக்கூடாது.
சாலையோரம் மக்கள் ஒரே இடத்தில் நிலையாக கூடியிருந்து வாகனம் சென்றவுடன் கலைந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
சிறப்பு அழைப்பாளரின் வாகனத்தை பின்தொடர்ந்து மக்கள் செல்வதை தவிர்க்கும் பொருட்டு தன்னார்வலர்களை நியமித்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகள், இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
-
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
அதிமுகவிலிருந்து வந்த 32 பேருக்கு.. சீட்டு கொடுத்த விஜய்.. இரட்டை இலையை காலி செய்யும் தவெக?












Click it and Unblock the Notifications