சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பத்திர பதிவு துறையில் அடுத்த ஆக்சன்.. அதிகாரிகளுக்கு எச்சரிக்கை.. அமைச்சர் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: பத்திர பதிவு அலுவலங்களில் லஞ்சம் மற்றும் இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிக வரித் துறை மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பத்திரபதிவு துறையில் லஞ்சம், இடைத்தரகர்கள் புழக்கம் அதிகமாக இருந்ததால் ஒரு கட்டத்தில் அரசு அதன் பல்வேறு வசதிகளை ஆன்லைனில் கொண்டு வந்தது.

சாப்ளினாவே இருந்தாலும்.. மீசை இல்லாட்டி ஃபெயிலு... ஒரு திடீர் தொடர் (6) சாப்ளினாவே இருந்தாலும்.. மீசை இல்லாட்டி ஃபெயிலு... ஒரு திடீர் தொடர் (6)

ஆனாலும் முறைகேடுகள் தொடர்வதாக புகார்கள் உள்ளது. அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரம் பதிவு செய்யும் விவகாரத்தில் தான் அதிகப்படியாக லஞ்சம் புழங்குவதாக புகார்களும் அடிக்கடி வருகின்றன.

பத்திர பதிவு

பத்திர பதிவு

பொதுவாக தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு செல்லும் முதல் இடம் எது என்று கேட்டால், பத்திர பதிவு அலுவலகங்கள் தான் என்று யாரை கேட்டாலும் சொல்வார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு அந்த துறையில் புகாக்ரள் இருப்பது உண்மை. கடந்த சில வருடங்களில் மட்டும் தரவுகளை பார்த்தால் போதும், லஞ்ச புகார்களில் அதிகம் கைதானவர்கள் யார் என்பது தெரிந்துவிடும்.

சர்ச்சை இல்லை

சர்ச்சை இல்லை

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பல்வேறு நடவடிக்கைகளை முதலைமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் சர்ச்சை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். தலைமை செயலாளர் நியமனம் முதல் பல்வேறு துறை அதிகாரிகள் நியமனம் வரை மிகவும் கவனமுடன் செயல்படுகிறார்.

மூர்த்தியும் அதிரடி

மூர்த்தியும் அதிரடி

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்பட அமைச்சர்களும் மிகவும் கவனமுடன் செயல்படுகிறார்கள். இவர்கள் அதிரடியான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பத்திரபதிவு துறையிலும் அதிரடி நடவடிக்கையை எடுக்க அந்த துறையின் அமைச்சர் மூர்த்தி ஆயத்தமாகி வருகிறார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

நேற்று மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகத்தில் வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் இருந்த அலுவலர்களை கடுமையாக எச்சரித்த அமைச்சர் பின் லஞ்சம் பெறுவது, இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

புகார் தெரிவிக்கலாம்

புகார் தெரிவிக்கலாம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்திர எழுத்தாளர்களுக்கும், பதிவாளர்களுக்கும் எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் பொதுமக்களின் அந்த நியாயமான பதிவு கட்டணமும், அவர்களுக்கு உரிய எழுத்து கட்டணமும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளேன். பத்திர பதிவு அலுவலர்கள் மீது குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் இருந்தால் துறை ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை விரைவில் அமைக்கபடும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்

English summary
moorthy, Minister for Commercial Taxes and Securities Registration has said that stern action will be taken if there is bribery and intermediaries in the egistration offices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X