'எழுத்துப் பிழை' - கள்ள ஓட்டு சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
சென்னை: கள்ள ஓட்டு சர்ச்சை எழுத்துப்பிழை தான் குழப்பத்துக்கு காரணம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் சென்னை அண்ணாநகரில் தனது வாக்கை செலுத்தினார்.
எல்.முருகன் வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதையடுத்து, அவரது வாக்கை யாரும் செலுத்தவில்லை என மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

எல்.முருகன்
இந்நிலையில், கள்ளஓட்டு சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ''எழுத்துப் பிழை காரணமாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். வேறு யாரும் என் ஓட்டை போடவில்லை'' என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். சர்ச்சைகள் முடிந்தாலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறார்.

அண்ணாமலை
''மத்திய அமைச்சர் முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?'' என கேள்வி அண்ணாமலை கேள்வி எழுப்பினார். இதனால் சென்னையில் அவர் வாக்களிக்கவிருந்த வாக்குச்சாவடியில் பதற்றம் ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம்
இதையடுத்து தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்தது. அதில், ''மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரும் செலுத்தவில்லை. சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் மத்திய அமைச்சரின் பெயருடன் சேர்த்து இரு முருகனின் பெயர்கள் உள்ளனர். அதில் ஒரு முருகன் வாக்களித்துவிட்டார். எனவே மத்திய அமைச்சர் எல் முருகன் வாக்களிக்கலாம்'' என மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

விளக்கம்
இதையடுத்து சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்த எல்.முருகன் தனது வாக்கை செலுத்தினார். இதே போல் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன் 26-வது வார்டில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், ''எழுத்துப் பிழை காரணமாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்'' என்று மத்திய அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications