'திமுக, அதிமுக மக்களை முட்டாளாக்குகிறது'.. 'நீட்' விவகாரம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் சுளீர்!
சென்னை: நீட் விவகாரத்தில் அதிமுகவும், திமுகவும் அரசியலாக்கி மக்களை முட்டாளாக்குகின்றனர் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவிற்கு மக்கள் மாபெரும் வெற்றியை அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த
இதற்காக திமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவிற்கு மக்கள் மாபெரும் வெற்றியை அளிப்பார்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த தெரிவித்தார். சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் திமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக கூறினார்.

விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா?
ஆளும்கட்சியின் பணபலம், ஆட்சிபலம், அதிகார பலத்தை எதிர்த்து உண்மை, நேர்மை, லட்சியத்தை வைத்து தேமுதிக போட்டியிடுவதாக கூறிய அவர் மக்களை நேரடியாக சந்தித்து வருவதாகவும் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ''விஜயகாந்த் பரப்புரை செய்வது குறித்து இனிமேல் முடிவு செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.

தேமுதிகவின் நிலைப்பாடு என்ன?
நீட் விவகாரம் தொடர்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டிற்கு நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு. ஆனால் பலரும் இந்த தீர்மானம் நிறைவேற்ற முடியாது என கூறுகின்றனர். திமுகவும், அதிமுகவும் இதை அரசியலில் ஆக்குகிறார்கள் எனவும் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் தீர்மானம் நிறைவேற்றும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது என்றும் கூறினார்.
Recommended Video

மக்களை முட்டாள் ஆக்க வேண்டாம்
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி தீர்மானம் நிறைவேற்றி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரேமலதா விஜயகாந்த், நீட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தால் செய்யுங்கள். இல்லையென்றால் மக்களை முட்டாள்களாக்க வேண்டாம் என்று கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications