பச்சையா பூவும் காயுமா..நெல்லை எப்படி அறுவடை செய்ய முடியும்? அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சுளீர்!
சென்னை: எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் தவறாக நெல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். டெல்டா பகுதிகளில் திடீரென்று வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த மறுநாளே தீவிரமான மழை பெய்தது எனவும், பச்சையான பூவும், காயுமாக இருக்கின்ற நெல்லை எப்படி அறுவடை செய்ய முடியும்? என தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கூட்டரங்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் தவறாக நெல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். டெல்டா பகுதிகளில் திடீரென்று வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த மறுநாளே தீவிரமான மழை பெய்தது.
குறுவை நெல்லை பொறுத்தவரையில், குறுகிய கால பயிராக விவசாயிகள் நடவு செய்வார்கள். அறுவடைக்கு முன்பாகவே, மழை வந்தால் உடனே அறுவடை செய்ய முடியாது. முதிர்ச்சி அடைந்த பிறகு தான் கதிரை அறுவடை செய்ய முடியும்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
பிஜேபி-யின் முன்னாள் தலைவர் காவல் துறையைச் சார்ந்தவர். விவசாயத்தைப் பற்றி தெரியாது. நேற்றைக்கு அவர் ஒரு அறிக்கையை விடுத்திருக்கிறார். மழை வருவதற்கு முன்பே அறுவடை செய்திருக்கலாமே என்று அவர் கூறியிருக்கிறார். மழை பெய்வது என்பது இயற்கை. அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. முன்பெல்லாம், வடகிழக்கு பருவமழை தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகு தான் தீவிரமான மழை தொடங்கும். தற்போது காலமாற்ற சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தால், மழை திடீர், திடீரென்று பெய்கிறது. விவசாயிகள், மழை, வெயில், வறட்சி ஆகிய இவைகளை எல்லாம் சமாளித்து நடைபெறக்கூடியது தான் விவசாயம்.
நெல் அறுவடை
அந்த வகையில், குறுவை விவசாயத்தைப் பொறுத்தவரை,கடந்த ஆண்டை விட இந்த அரசின் முன்னெடுப்பு காரணமாக குறுவை தொகுப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஆண்டுதோறும் குறுவை தொகுப்பை அறிவித்திருந்தார். இந்த ஆண்டு குறுவை தொகுப்பு கிட்டத்தட்ட 214 கோடி ரூபாய் அளவிற்கு டெல்டா பகுதிகளிலும், டெல்டா இல்லாத மற்ற பகுதிகளிலும் கூடுதலாக அறிவித்திருக்கிறார். மெஷின் மூலமாக நடுவதற்கு நான்காயிரம் ரூபாயும், இடுபொருள் இலவசமாகவும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கின்ற காரணத்தாலும், அதிகமான விவசாயிகள் இதனால் பயனடைந்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை
அதேபோல, நெல்லின் விலை கிட்டத்தட்ட குவிண்டால் இரண்டாயிரத்து 500 ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்பட்ட காரணத்தாலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்ட காரணத்தாலும், மூன்று மடங்கு நெல்லை உற்பத்தி செய்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டு ஆட்சி காலங்களில், ஒரு கோடியே 19 இலட்சத்து 81 ஆயிரத்து 352 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது 53 மாதங்களில் 1 கோடியே 93 இலட்சத்து 28 ஆயிரத்து 309 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
நெல் கொள்முதல்
மொத்தம் இந்த ஆட்சியில் 7 இலட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் நெல் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்பட்டிருக்கிறது. பத்தாண்டு கால ஆட்சியில் சேமிப்பு கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டது 7 இலட்சம். ஆனால் இந்த நான்காண்டு காலத்தில் சேமிப்பு கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டது 7 இலட்சம் மற்றும் பிற. இவை தவிர, ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களின் மூலமாக 1 இலட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிக்கக்கூடிய கிடங்குகளில் நெற்பயிர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது.
நெல் உற்பத்தி
குறுவை நெல்லை பொறுத்தவரையில், கடந்த காலங்களில் விவசாயிகள் நெல் உற்பத்தி செய்யும் காலங்களில் அறுவடை செய்யமாட்டார்கள். அவர்கள் காலத்தே அறுவடை செய்யவேண்டும். அறுவடை செய்வதற்கு களங்கள் இருக்கவேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி அவர்கள் ஏன் நெல்லை அறுவடை செய்யவில்லை என்று கேட்கிறார்? பயிர் முதிர்ச்சி அடைந்த பிறகு தான் விவசாயிகள் அறுவடை செய்யமுடியும். இதற்கு ஏன் மழை வருவதற்கு முன்பே நீங்கள் அறுவடை செய்திருக்கலாமே என்று அண்ணாமலை அவர்கள் கேள்வி கேட்கிறார். பச்சையான பூவும், காயுமாக இருக்கின்ற நெல்லை எப்படி அறுவடை செய்ய முடியும்? என்று இவைகள் எல்லாம் தெரியாமல் இந்த அரசின் மீது தூற்றவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் கருத்துக்களை வழங்கியிருக்கிறார்கள்." என்றார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications