இதை கூகுளில் தேடாதீங்க.. சைபர் தந்திரங்கள்.. டெபிட், கிரிடிட் கார்டு பற்றி போலீஸ் முக்கிய அலார்ட்
சென்னை : தமிழகத்தில் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்களை ஏமாற்ற சைபர் குற்றவாளிகள் பல்வேறு தந்திரங்களை கடைபிடிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முக்கிய அறிவுறுத்தல்களை தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழங்கி உள்ளது. கூகுகளில் வாடிக்கையாளர் சேவை எண்ணை தேட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "கொரோனா தொற்று நோய் பரவும் இந்த காலக்கட்டத்தில் தொடர்பு இல்லாத கட்டண மோசடிகள் ( கார்டு எண்ணை பயன்படுத்தி மோசடி செய்வது) அதிகரித்து வருகின்றன, மேலும் இது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தொடர்பு இல்லாத கட்டண அம்சங்களால் வங்கிப் பரிவர்த்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கார்டுகள் NFC (Near Field Communication) தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. நீங்கள் இதில் உள்ள "TAP and PAY முறையில் உங்கள் பின்/பாஸ்வேர்டை போடாமலேயே பணம் செலுத்த முடியும். கணிணி திருடர்கள் இந்த அம்சங்களைப் பயன்படுத்திக் கொண்டு மக்களை எளிதாக ஏமாற்றுகிறார்கள். இந்த திருட்டுகள் அதிகரித்து வருகிறது.

பாக்கெட்டிலும் மோசடி
சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள் சிலவற்றை தெரிவிக்க விரும்புகிறோம். அதன் விவரம் பின்வருமாறு: 1. பாதிக்கப்பட்டவரின் அட்டை பாக்கெட்/வாலட்டில் வைக்கப்படும் போது, மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவரின் அட்டையைப் படித்து, மினி கார்டு ரீடர் அல்லது பிஓஎஸ் கருவி மூலம் தொடர்பு இல்லாத பரிவர்த்தனை செய்ய முயற்சிக்கிறார்கள்.

பின்னும் தேவையில்லை
2. மோசடி செய்பவர்கள் அத்தகைய அட்டையை திருடுவதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில் உங்கள் டெபிட் அல்லது கிரிடிட் கார்டுக்கு குறிபிட்ட அளவிற்கு செலவு செய்ய எந்த ஒரு PIN அல்லது கடவுச்சொல் தேவையில்லை. எனவே மோசடி செய்பவர்கள் அதை எந்த POS முனையத்திலும் கொடுக்கலாம். வியாபாரிகளும் கார்டு மூலம் நடக்கும் இந்த பரிவர்த்தனையை ஏற்க முடியும்.

ஏழை மக்கள்
3. தற்போது ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, தற்போது 5000 ரூபாய் அளவிற்கு உங்கள் கார்டில் ஒடிபி அல்லது பாஸ்வேர்டு இல்லாமல் தினசரி செலவு செய்ய முடியும். மோசடி செய்பவர்கள் இந்த சிறப்பு பரிவர்த்தனை வரம்பை பயன்படுத்தி ஒரு சிறப்பு வன்பொருளைப் பயன்படுத்தி "சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்களை" குறிவைத்து மோசடி செய்கிறார்கள்.

டெபிட் கார்டு
எனவே இத்தகைய செயல்களில் இருந்து பாதுகாக்க சில பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளை தெரிவிக்கிறோம். 1. உங்கள் கிரிடிட் அல்லது டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள். ஒரு வேளை திருடப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட மொபைல் பேங்கிங் பயன்பாட்டைப் பயன்படுத்தி உடனடியாக உங்கள் அட்டையை பிளாக் செய்யுங்கள்.

பரிவர்த்தனை வரம்பு
2. உங்கள் கார்டை நீங்கள் பயன்படுத்தும் பயன்பாட்டிற்கு ஏற்ப அட்டையின் பரிவர்த்தனை வரம்பைக் குறைக்கலாம். டெபிட் கார்டில் தினசரி பரிவர்த்தனை வரம்பு இவ்வளவு தான் என உச்சவரம்பையும் செய்ய முடியும்.

கூகுளில் தேட வேண்டாம்
3. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளிலிருந்து பாதுகாக்க உங்கள் அட்டையை எப்போதும் RFID protected wallet இல் வைத்திருங்கள்.
4. வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடாதீர்கள் அல்லது உங்கள் குறைகளை எந்த சமூக ஊடகத்திலும் பதிவிடாதீர்கள் ஆனால் உங்கள் வங்கி பாஸ்புக்/ அங்கீகரிக்கப்பட்ட எண்களைப் பயன்படுத்தி வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.

தெலைப்பேசி எண்
5. இது போன்ற மோசடியில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், https://cybercrime.gov.in/ என்ற வலைதளத்தில் புகார் அளிக்கவும் அல்லது புகாரளிக்க 155260 ஐ அழைக்கவும். இது ஒரு பொதுவான எச்சரிக்கை மட்டுமே. இது குறிப்பிட்ட தனி நபருக்கோ அல்லது தயாரிப்புகளுக்கோ அல்லது சேவைகளுக்கோ எதிரானது அல்ல" இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications