சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவப்பு கலர் தக்காளி.. செமசெம.. சும்மா தெறிக்குது.. வர்ற மழைய விட்ராதீங்க மக்களே.. வெதர்மேன் அழைப்பு

பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழக வெதர்மேன் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Rain in Chennai | சென்னையில் மழை! சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது

    சென்னை: சென்னை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவில் பெய்து வரும் மழை பெரும் ஆறுதலை அளித்துள்ளது. அதிலும் கடந்த 2 நாட்களாக வெளுத்து வாங்கி விட்டது மழை.

    மொத்த சென்னையும் காதலனைக் காணாத காதலியைப் போல காய்ந்து போய்க் கிடக்கிறது. இப்படிப்பட்ட சென்னைக்கு கடந்த சில நாட்களாக வந்து வந்து போகும் மழை பெரும் பரவசத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    TN Weather man Pradeep John says Chance to Rain in Chennai City

    ஆரம்பத்தில் மண் நனைந்த அளவுக்குத்தான் மழை பெய்தது. ஆனால் இப்போது மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் அளவுக்கு மழை நன்றாக பெய்து வருகிறது. இது மக்களை மட்டுமல்லாமல் சென்னை மண்ணையும் பெரும் உற்சாகப்படுத்தியுள்ளது.

    நேற்று இரவு செம மழை .. தொடர்ந்து 3வது நாளாக பெய்த இந்த மழையால் மக்கள் பெரும் உற்சாகமாகி விட்டனர். இரவெல்லாம் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. பெரும் மேகக் கூட்டங்களுடன் இடியும் மின்னலுமாய் கொட்டிய மழையால் மக்கள் இரவிலும் கூட தூக்கத்தை மறந்து உற்சாகமாக அதை அனுபவித்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேனும் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், எங்கு பார்த்தாலும் செவப்பு தக்காளி மேகக் கூட்டங்கள்.. செம செம.. சும்மா தெறிக்கப் போகுது. 3வது நாளாக சென்னையில் நல்ல மழை. நிச்சயம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மழை நீர் வடிகால்களை சரியா வச்சுக்கங்க. வர்ற மழையை விடாதீங்க என்று உற்சாகமாக போட்டுள்ளார்.

    உண்மையில் நேற்று மட்டுமல்ல இன்றும் கூட சும்மா ஊட்டி, கொடைக்கானலை எடுத்து மிக்ஸ் செய்து மிக்ஸியில் சுவிட்சர்லாந்தையும் கொஞ்சம் போட்டு அடிச்சுக் கலக்கி எடுத்தா எப்படி குளிருமோ அப்படி ஒரு சில் கிளைமேட்டில் உள்ளது சென்னை. இந்த மழை தொடர வேண்டும்.. இந்த மழையில் அடைத்துக் கிடக்கும் அத்தனை புழுக்கங்களும் அடித்துக் கொண்டு ஓடி.. மனசையும், மண்ணையும் நனைத்து குளிர வைத்து இணைத்து விட்டுப் போக வேண்டும் இந்த மழை.

    English summary
    TN Weatherman says that, Chance to Rain the City and Surely ground water will improve a lot
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X