தமிழகம் தலைநிமிர்ந்து பீடு நடை போடுவதை உறுதி செய்யும் பட்ஜெட்! காங்கிரஸ் தலைவர் அழகிரி பாராட்டு
சென்னை: தமிழகம் தலைநிமிர்ந்து பீடு நடை போடுவதை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து சென்று கொண்டிருப்பதாக காங்கிரஸ் பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வளர்ச்சிப் பாதை
தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு பதவியேற்ற நாளிலிருந்து பணிகளைத் தொடங்கி, சாதனைகளைப் படைத்து வருகிறது. இதனால் தமிழகம் தலைநிமிர்ந்து பீடு நடை போட்டு வருகிறது. இதை உறுதி செய்கிற வகையில் தமிழகத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

20 ஆயிரம் கோடி
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் மூலம் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையால் ரூபாய் 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்த பின்னர் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டுமென நிதியமைச்சர் மத்திய அரசைக் கோரியிருக்கிறார். 15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு ஒழுங்காக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிதியமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சமூக நலத் திட்டங்கள்
நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூபாய் 4,816 கோடி நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த 2015 ஆம் ஆண்டு அன்றைய அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அத்தகைய பாதிப்புகள் திரும்ப ஏற்படாமல் இருக்க, சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூபாய் 1,000 கோடியும், பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூபாய் 7,400 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிதியின் மூலம் இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படுகிற பாதிப்புகளிலிருந்து மக்களை நிச்சயம் காப்பாற்ற முடியும்.

அரசுப் பள்ளிகளில்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த பிறகு, உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 உதவித் தொகை வழங்கப்படுவது மிகுந்த பாராட்டுக்குரியது. பொதுவாக மாணவிகளிடையே பள்ளிகளில் இடை நிற்றல் அதிகமாக இருப்பதை இந்த உதவித் தொகை நிச்சயம் தடுத்து நிறுத்தும். ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் அன்பழகன்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்த ரூபாய் 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளுடைய தரம் நிச்சயமாக உயர்த்தப்படும். ரூபாய் 120 கோடியில் முன்மாதிரி பள்ளிகள் 15 மாவட்டங்களில் தொடங்குவதன் மூலம் மாணவர்களுடைய கல்வித் தரம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில்
அ.தி.மு.க. ஆட்சியில் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் - துறைமுக உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூபாய் 5,700 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகன நெரிசலைக் குறைக்கவும், அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்கவும், ஆறு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு ரூபாய் 135 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் அமைந்திட உறுதி செய்யும் வகையில் ரூபாய் 18,218 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வேலை வாய்ப்புகள் பெருமளவில் பெருகவும், தொழில் வளர்ச்சி ஏற்படவும் மிகப்பெரிய வாய்ப்பு அமைந்திருக்கிறது.

ஐ.டி.ஐ. கல்வி
அனைத்து மாணவர்களும் பள்ளிக் கல்வியை முடித்து பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், ஐ.டி.ஐ. கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போதைய நிதிநிலை அறிக்கையில் இந்த கல்வி நிறுவனங்களை மேம்படுத்தவும், இதில் பயிலும் மாணவர்களின் முழுச் செலவை அரசே ஏற்கவும் ரூபாய் 2,517 கோடி ஒதுக்கியிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. இதன்மூலம் மாணவர்களிடையே தொழில் பயிற்சித் திறனை மேம்படுத்தி சுயதொழில் தொடங்க அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான திருக்கோயில்களைப் புனரமைத்து, சீரமைக்க ரூபாய் 100 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூபாய் 340 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்து சமய அறநிலையத்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு திருக்கோயில்கள் நிர்வாகம் புத்துணர்வு பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து சென்று கொண்டிருக்கிறது. அத்தகைய வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்துகிற வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பாராட்டுகிறேன்.
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications