'பூனைக்கு மணி கட்டும் நேரம் வந்துவிட்டது' -ஆளுநர் ரவி மீது தமிழக காங்கிரஸ் ஆக்ரோஷம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் வேலையைத் தவிர மற்ற வேலைகளை எல்லாம் ரவி சரியாகச் செய்கிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

மேலும் ஆளுநர் ரவியை சுட்டிக்காட்டி, பூனைக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்த போது, பலரும் வாழ்த்து தெரிவிக்க நான் மட்டுமே கடுமையாக எதிர்த்தேன். எதிர்க்கட்சிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இதுபோன்ற நியமனங்களை மத்திய அரசு செய்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

நேர்மையான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையில், ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருக்கிறார்களோ ? என்ற சந்தேகத்தையும் அப்போது எழுப்பியிருந்தேன்.

ஜனநாயகம்

ஜனநாயகம்

ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்த உடனே எதிர்ப்பு தெரிவிப்பதா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், நான் எழுப்பிய சந்தேகங்களை எல்லாம் இன்றைக்கு ஆளுநர் ரவி உண்மையாக்கிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் வேலையைத் தவிர மற்ற வேலைகளை அவர் சரியாகச் செய்து கொண்டு, ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா

நீட் தேர்வு விலக்கு மசோதா

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி தமிழக மக்களுக்கு ஆளுநர் ரவி துரோகம் செய்தார். நீட் மசோதா மட்டுமின்றி தமிழக அரசின் 18 க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டார்.

சனாதன தர்மம்

சனாதன தர்மம்

அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய ஆளுநர் ரவி, 'சனாதன தர்மத்தில் ஓளியால் உருவாக்கப்பட்டதே இந்தியா' என்று பேசி, ஆர்.எஸ்.எஸ் முகத்தைக் காட்டினார். மதவாத, வருணாசிரம, வன்முறை கருத்துகளை ஆளுநர் பதவியிலிருந்து கொண்டு கூறுவது அழகல்ல. இதைவிட ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் வேறேதும் இருக்க முடியாது.

ஆளுநர் பதவிக்கு அழகா?

ஆளுநர் பதவிக்கு அழகா?

சமீபத்தில் கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில், தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு பரிந்துரைத்ததில் தாமதம் ஏன்? என்று, தமிழக பா.ஜ.க. தலைவர் தலைவர் அண்ணாமலையை போல் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஆளுநர் ரவி. அண்ணாமலை தான் சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறார் என்றால், முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரும் அதையே செய்யலாமா? அது ஆளுநர் பதவிக்கு அழகா?

பா.ஜ.கவின் நரித்தனம்

பா.ஜ.கவின் நரித்தனம்

சமீபகாலமாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளான ஆளுநரும் அண்ணாமலையும் தமிழ்ப் பற்று மிக்கவர்கள் போல் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநரின் குரலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் குரலும் ஒரே மாதிரியாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயல்வது தான் பா.ஜ.கவின் நரித்தனம்.

பூணைக்கு மணி

பூணைக்கு மணி

ஆளுநர் ரவிக்கும் அண்ணாமலைக்கும் தமிழ் மொழி மீது ஏற்பட்டிருக்கும் பாசம் வெறும் வேஷம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அரசிலும் அரசியலிலும் செய்யும் ஜனநாயக படுகொலையையும், கோமாளித் தனத்தையும் இனியும் கைக்கட்டி, வாய்மூடி மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பூனைகள் வெளியே வந்து விட்டன. இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது. இத்தகைய சக்திகளிடமிருந்து தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்ற வகுப்புவாத எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசர சூழல் உருவாகியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+