சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர தரவரிசை பட்டியல் வெளியானது..ரஞ்சிதா முதலிடம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2022 (TNEA 2022) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிஇ.,பிடெக் படிப்புகளுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். www.tneaonline.org இல் உங்கள் லாக் இன் பாஸ்வேர்ட் பயன்படுத்தி உங்கள் தரவரிசையைச் சரிபார்க்கலாம். பி.இ. கட் ஆஃப் மதிப்பெண்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்று தமிழகத்தை சேர்ந்த ரஞ்சிதா முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஒப்படைத்த இடங்களுக்கான சேர்க்கை ஒற்றை சாளர முறையாக 2022 பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

2022-23 கல்வியாண்டில், பொறியியல் பட்டயப் படிப்பிற்கு ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2.10 லட்சமாக உள்ளன. இதில் 1.95 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ளன. இதில், 55-60% இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன. மேலும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2000க்கும் மேற்பட்ட இடங்களும், இதர அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 10,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

ஆக.16ல் தரவரிசை பட்டியல் ரிலீஸ்..தமிழக பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக காரணம் என்ன? ஆக.16ல் தரவரிசை பட்டியல் ரிலீஸ்..தமிழக பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக காரணம் என்ன?

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பத்து மாணவ மாணவிகள் கட் ஆஃப் 200க்கு 200 எடுத்துள்ளனர். தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆகஸ்ட் 20 முதல் 23 வரை முதற்கட்டமாக, சிறப்பு பிரிவு இடஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர், 7.5% அரசுப் பள்ளி ஒதுக்கீடு மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 25ம் தேதி அக்டோபர் 21ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தரவரிசைப் பட்டியல்

தரவரிசைப் பட்டியல்

இந்நிலையில், இந்த பொறியியல் கலந்தாய்வு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.www.tndte.gov.in (அல்லது) www.tneaonline.org என்ற இணையப் பக்கத்தில் தரவரிசைப் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம். தரவரிசைப் பட்டியல் 200 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். இதில்,கணித பாடநெறிக்கு 100 மதிப்பெண்களும், இயற்பியல், வேதியியல் பாடநெறிகளுக்கு தலா 50 மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இம்மூன்று பாடநெறிகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, இந்தாண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளன. பி.இ. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் இந்தாண்டு ரேண்டம் எண் வெளியீடு இல்லை. தொழிற்கல்வி படித்த மாணாக்கர்களுக்கு பொறியியல் படிப்பு சேர்க்கையில் 2 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்.

ரஞ்சிதா முதலிடம்

ரஞ்சிதா முதலிடம்

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் பெயர்களை அமைச்சர் வெளியிட்டார். பி.இ. கட்ஆப்-ல் 200க்கு 200 மதிப்பெண் பெற்று தமிழகத்தை சேர்ந்த ரஞ்சிதா முதலிடம் பிடித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான புதிய பாடத்திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 19 வரை புகார் அளிக்கலாம்

ஆகஸ்ட் 19 வரை புகார் அளிக்கலாம்

பி.இ. தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், குறை இருந்தால் 19ம் தேதி வரை பதிவு செய்யலாம். TNEA சேவை மையத்தில் குறைகளை பதிவு செய்தால் உடனே நிவர்த்தி செய்யப்படும். தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, வேறு குறைகள் இருந்தாலோ 18004250110ஐ அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

9,981 அரசு பள்ளி மாணவிகள்

9,981 அரசு பள்ளி மாணவிகள்

தமிழ்நாட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,96,627 இடங்களும், அண்ணா பல்கலையில் 900இடங்களும் உள்ளன. இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரும் 9,981 அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu Engineering Admission, TNEA 2022 rank list today, August 16. Once released, candidates will be able to check their TNEA rank list from the official website - tneaonline.org.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X