டிஎன்பிஎஸ் குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. நவம்பர் 8 வரை காலஅவகாசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பிரிவில் மொத்தம் 6,514 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான காலஅவகாசம் நாளையுடன் முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

TNPSC Group

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு அக்டோபர் 6ம் தேதி வெளியானது. மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நர்முக உதவியாளர், விஏஓ, வனக்காவலர், பில் கலெக்டர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் நியமனங்கள் உள்ளன.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய நவம்பர் 5 (நாளை) நள்ளிரவு 11.59 மணி வரை 'டைம்' வழங்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பம் செய்வதற்கான தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் விண்ணப்பம் செய்வோர் நவம்பர் 8 ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம்.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ''ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு IV (தொகுதி - IV பணிகள்) 2026-க்கான அறிவிக்கை எண் 112026, நாள் 06.10.2026 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் அரசாணை (நிலை) எண் 68, மனிதவள மேலாண்மை (எஸ்) துறை, நாள் 30.10.2016-ல் அனைத்து பிரிவினருக்கும், வயது உச்ச வரம்பு ஐந்து ஆண்டு காலம் உயர்த்திஆணைய வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இத்தெரிவிற்கு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் 08.11.2026 அன்று நள்ளிரவில் 11.59 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான காலஅவகாசம், தேர்வு தேதி உள்ளிட்ட பிற தேதிகளில் மாற்றம் இல்லை. இதனால் முன்பு கூறியது போல் நவம்பர் 9 ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு 11.59 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்யலாம்.

பிறகு 2027 ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வுகள் இருக்கும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் www.tnpscexams.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+