TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. டவுன்லோடு செய்வது எப்படி?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். வரும் 12 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 எழுத்துத் தேர்வு வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், இளநிலை நிர்வாகிகள், இளநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், ஸ்டெனோ தட்டச்சர் (கிரேடு 3), தனிப்பட்ட எழுத்தர், உதவியாளர், கள உதவியாளர், வனக் காவலர் மற்றும் வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களுக்கு இந்த குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது.

இந்த 3,395 காலிப்பணியிடங்களுக்கான இந்த தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரை பெறப்பட்டது. விண்ணப்பத்தை திருத்த மே 29 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. 18 வயது முதல் 50 வயது வரையிலானோர் தேர்வை எழுதுகின்றனர். குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தாலே இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு வரும் ஜூலை 12ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை மூன்று மணிநேரத்திற்கு நடைபெறுகிறது.
TNPSC தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுதும் மையத்தில் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை கையில் வைத்திருப்பது கட்டாயம்.
ஹால் டிக்கெட்டில் தேர்வு மையம், தேர்வு மையத்திற்கு வர வேண்டிய நேரம், தேர்வர்கள் குறித்த விவரம், தேர்வு குறித்த விவரங்கள் அடங்கியிருக்கும். ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட உடன் அதில் அச்சிடப்பட்ட அனைத்து தகவல்களும் சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும். ஹால் டிக்கெட்டில் தவறு இருக்கும்பட்சத்தில் உடனடியாக டிஎன்பிஎஸ்சியை அணுக வேண்டும். இதனால், தேர்வு நாளில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைன் சேவைகள் (Online Services) என்பதன் கீழ் 'ஹால் டிக்கெட் பதிவிறக்கம்' (Hall Ticket Download) என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பின் "TNPSC Group Hall Ticket 2025" இணைப்பைக் கண்டுபிடித்து அதை கிளிக் செய்யவும். உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, Submit என்பதை கிளிக் செய்து உங்கள் Admit Card-ஐ பெறலாம். அதன்பின், PDF-ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications