சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட் நியூஸ்.. தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 10% கட்டண சலுகை வந்தாச்சு

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அரசு பேருந்துகள் சார்ந்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தான் கையெழுத்திட்ட முதல் ஐந்து கோப்புக்களில் மகளிருக்கான இலவச பேருந்து தொடர்பான உத்தரவு கோப்பும் ஒன்று.

தற்போது அதனைத் தொடர்ந்து, அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்க இணையவழி மூலம் முன்பதிவு செய்தால் 10% கட்டண சலுகை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான இலவச பேருந்து சேவையை போல இந்த திட்டமும் பயணிகளிடையே வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுவதாக துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க ஆர்எஸ்எஸ் சதி... கே.எஸ்.அழகிரி பகிரங்க குற்றச்சாட்டு திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க ஆர்எஸ்எஸ் சதி... கே.எஸ்.அழகிரி பகிரங்க குற்றச்சாட்டு

 அறிவிப்பு

அறிவிப்பு

அரசு போக்குவரத்து கழகங்களை நவீனப்படுத்துவது, பயணிகளின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக புதிய அறிவிப்புகளை வெளியிடுவது என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இனி வரும் காலங்களில் தானியங்கி பயணச்சீட்டு முறை, பணப்பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை உள்ளிட்ட புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகை

சலுகை

இந்நிலையில் இதன் முதல்கட்டமாக ஏற்கெனவே சட்டப்பேரவையில் அறிவித்ததைப்போல கட்டண சலுகை இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "அரசு விரைவு பேருந்துகளில் இணையவழி மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு 10% கட்டண சலுகை வழங்கப்படும். அதாவது இருவழிப் பயணச்சீட்டை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிபந்தணைகள்

நிபந்தணைகள்

மேலும், "இவ்வாறு இணையவழியாக முன்பதிவு செய்வதன் மூலம் இருவழிப் பயணத்தில் திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். ஆனால் விழா நாட்களில் இந்த சலுகை பொருந்தாது" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தின் கீழ் சுமார் 1,082 அதிநவீன பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. 300கி.மீக்கும் அதிகமான தொலைவுகளில் என அண்டை மாநிலங்களுக்கும் சேர்த்து 251 வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 யோசனை

யோசனை

ஏற்கெனவே மகளிருக்கு இலவச பேருந்து, தற்போது கட்டண சலுகை என அறிவித்துள்ளதால் ஏற்படும் வருவாய் இழப்புகளை சரி செய்ய பேருந்து கட்டணம் தவிர்த்து, பேருந்தில் விளம்பரங்கள், பேருந்துகளில் பயண சுமைப் பெட்டிகள் என இதர வருவாயை பெருக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் போக்கவரத்து துறை யோசித்தும் சில அம்சங்களை அமல்படுத்தியும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ever since the DMK government took charge, the government has beenmaking many important announcements related to buses. One of the firstfive files signed by M.K. Stalin as the Chief Minister was the orderfile related to free bus for womens. Now following this, it has alreadybeen announced that 10% fare concession will be given if you book onlineto travel on government express buses. Now it has been announced thatthis notification will come into effect from today. According to sourcesin the sector, this scheme is expected to be well received by passengerslike the free bus service for womens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X