சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்கள்.. அவை என்னென்ன?.. இன்று முதல் டோக்கன் விநியோகம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்களை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலை மிகவும் மோசமாகி உள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 4000 வழங்குவதாக திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது.

அதன்படி 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7 ஆம் தேதி கையெழுத்திட்டிருந்தார். அதில் இந்த திட்டமும் ஒன்று. முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்பட்டுவிட்டது.

காலை 8 முதல் பகல் 12 வரை.. முழு ஊரடங்கின் போதும் ரேஷன் கடைகள் இயங்க.. தமிழ்நாடு அரசு அனுமதி காலை 8 முதல் பகல் 12 வரை.. முழு ஊரடங்கின் போதும் ரேஷன் கடைகள் இயங்க.. தமிழ்நாடு அரசு அனுமதி

 ரூ 2000

ரூ 2000

இரண்டாவது தவணை ரூ 2000 வழங்குவது குறித்து நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினுடன் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் நேற்று காலை 6 மணியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் கேஸ்கள் குறைந்ததால் மேலும் ஒரு வாரத்திற்கு வரும் 7-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அரசு அறிவித்தது.

 பழங்கள் விற்பனை

பழங்கள் விற்பனை

பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் நடமாடும் வண்டிகளில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வது போல் மளிகை பொருட்களும் விற்பனை செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கின. மேலும் யாரும் பசியின்றி இருக்கக் கூடாது என்பதற்காக 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகம்

தமிழகம்

அதற்கான டோக்கன்களை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வழங்குகிறார்கள். ஜூன் 4 ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும். ஜூன் 5 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட நாள், நேரத்திற்கு சென்று 13 மளிகை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

 7ஆம் தேதி முதல்

7ஆம் தேதி முதல்

நிர்வாக காரணங்களுக்காக துவரம் பருப்பு மட்டும் வரும் 7ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கிடைக்கும். அவை என்னென்ன பொருட்கள் என்பதை பார்ப்போம்.

  1. கோதுமை மாவு- 1 கிலோ
  2. உப்பு- 1 கிலோ
  3. ரவை- 1 கிலோ
  4. சர்க்கரை- 500 கிராம்
  5. உளுத்தம் பருப்பு- 500 கிராம்
  6. புளி- 250 கிராம்
  7. கடலை பருப்பு- 250 கிராம்
  8. கடுகு- 100 கிராம்
  9. சீரகம்- 100 கிராம்
  10. மஞ்சள் தூள்- 100 கிராம்
  11. மிளகாய் தூள்- 100 கிராம்
  12. குளியல் சோப்பு (125 கிராம்)- 1
  13. துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1

English summary
Tokens will be issued from today by Ration shop staffs for 13 grocery items.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X