தக்காளி,வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைக்க ரூ. 48 கோடி..உழவர்களுக்கு GRAINS இணையதளம்
உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS என்ற இணையதளம் அறிமுகம் செய்யபடும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையுடன் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சேலம் , அமராவதி சர்க்கரை ஆலைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட உரம் தயாரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வேளாண் விஞ்ஞானிகள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாடு, ஆடு வளர்ப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் இடுபொருட்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.
385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு உதவி மையங்கள் செயல்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தக்காளி ஆண்டு முழுவதும் கிடைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு. வெங்காயம் சீராக கிடைக்க ரூ.29 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53,400 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணுயிர் பாசன முறை அறிமுகம் செய்யப்படும்.
தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்கரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மையை சிறப்பை மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ள அவர்களுக்கு பண்ணை சுற்றுலா அழைத்து செல்லப்படும் எனவும் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார். உணவின் அருமையையும், விவசாயத்தின் பெருமையையும் மாணவர்கள் உணர்ந்து கொள்ள இந்த திட்டம் உதவும்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications