இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 12/02/2026: ஸ்டாலின் டூ நாஞ்சில் சம்பத் வரை.. தலைவர்களின் நச் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2026) வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சுகள், கருத்து மோதல்கள் என இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.

இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (12/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..

tamil nadu assembly election 2026


முதல்வர் ஸ்டாலின்

கூட்டணி பற்றி, தொகுதி பங்கீட்டை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.. நீங்கள் தோழமை கட்சியுடன் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். 234 தொகுதிகளிலும் நான் தான் நிற்கிறேன் என நினைத்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், காங்கிரசுக்கும் தெரியும். கூட்டணியில் சச்சரவு என்று சொல்வது கூட்டணியை முறிக்க நடக்கும் திட்டமிட்ட சதி. இந்த சதி குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. காங்கிரசும் கவலைப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி

திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் நான் தான். மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி அமையும் போதே இதனை தெரிவித்து விட்டார். முதல்வர் ஸ்டாலின் எப்போது எங்கு அழைத்தாலும் விவாதத்துக்கு தயார். எங்களை பற்றி பல அவதூறு பிரச்சாரத்தை செய்து வந்தார். அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல நான் தயார்.

பிரேமலதா விஜயகாந்த்:

எடப்பாடி பழனிசாமி சொன்னதை கேட்டீங்களா.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்னதை கேட்டீங்களா.. திமுக அமைச்சர் எவ வேலு சொன்னதையும் கேட்டு இருப்பீர்கள். இந்த மூன்று கட்சிகளுமே சொல்லிவிட்டன தேமுதிக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று..

பிறகு பத்திரிகையாளர்களாக உங்களுக்கு மட்டும் இரண்டு பக்கமும் பேசுறாங்க என்ற தவறான பொய்யான செய்தியை யார் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் சொல்வதை விட உரியவர்களே சொல்லிவிட்டார்கள். அதனால் இதுபோன்ற கேள்விகளை திரும்ப திரும்ப கேட்க வேண்டாம். எங்கள் கட்சி நிர்வாகிகள் எந்த கூட்டணியை விரும்புகிறார்களோ அந்த கூட்டணியில் இணைவோம்.

தமிழிசை சவுந்தரராஜன்

"என்டிஏ கூட்டணி பலமாக இருக்கிறது. எதிர்கூட்டணிதான் வெலவெலத்துப் போயிருக்கிறது. பாஜகவால் வெல்லவும் முடியும், ஆட்சி அமைக்கவும் முடியும் என்பதை நடத்திக் காண்பிப்போம். விஜய் அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். விஜய் திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைத்தால் அவர் அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்.

ராமதாஸ்:

அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை எதையோ பேசுகின்றனர் ஒரு கூட்டம் பொய் சொல்வதையே அரசியலாக கொண்டு செயல்படுகிறது. அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியில் இருந்தே நீக்கிவிட்டோம்.

சிவி சண்முகம்

நான்தான் தி.மு.க-வுக்கு மாற்று சக்தி என்று கமல்ஹாசன் வந்தார். டார்ச் லைட் எடுத்து அடித்தார். ஆனால் அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோற்றுப் போனார். நாளை சிம்புகூட அரசியலுக்கு வரலாம். அதேபோல இப்போது ஒருவர் வந்திருக்கிறார்.

tamil nadu assembly election 2026

சினிமா தியேட்டரில் விசில் அடிக்கலாம். பேருந்தை நிறுத்துவதற்கு விசில் அடிக்கலாம். ஆனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு விழும் வாக்குகளைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. பல ஜாம்பவான்களை பார்த்த இயக்கம் அதிமுக.

விஜய் முன்னாள் மேலாளர் செல்வக்குமார்

"வரும் சட்டசபைத் தேர்தலில் விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார். விஜய் ரசிகர்களுக்கு செய்த அநியாயங்கள், துரோகங்களை தோலுரித்துக் காட்டுவேன்"

மாணிக்கம் தாகூர்

"கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006-ல் மக்கள் தீர்ப்பைச் செயல்படுத்தாதது நம் தவறு. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"

ராஜகண்ணப்பன்

காங்கிரஸ் கட்சி கூட்டணியை பற்றி முதல்வர் பேசிக்கொள்வார். அவர்கள் வந்தால் வரட்டும், வரவில்லை எனில் போகட்டும். கூட்டணியை நம்பி எல்லாம் அரசியல் நடத்த முடியாது. அதிமுகவில் இருக்கும் தொண்டர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். அங்கு யாரும் இல்லை. நிர்வாகிகள் மட்டும் இருக்கிறார்கள். அவர்களும் அந்த பதவிக்காக அங்கு இருக்கிறார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வரவிருக்கும் ஆட்சி அதிமுக ஆட்சிதான்; எடப்பாடி பழனிசாமிதான் உறுதியாக முதலமைச்சர்; அதில் எந்த சந்தேகமும் கிடையாது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை; எடப்பாடி பழனிசாமியைத்தான் மக்கள் நம்புகிறார்கள்.

கார்த்தி சிதம்பரம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்த கூட்டணி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. வரவிருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அல்லாத கூட்டணி வெற்றி பெறும். தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி முக்கிய காரணி இல்லை.

நாஞ்சில் சம்பத்

"தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டது. தமிழ் தேசியம் என்ற பெயரில் சில்லறை பயல் சீமான் அருவருப்பான அரசியலை செய்து வருகிறார். மேலும் தற்போது மாட்டுக்கு பின்னால் நின்று முட்டாள்தனமாக சீமான் அரசியல் செய்கிறார். விஜய் செல்லும் ஊரில் எல்லாம் சீமான் கட்சி சமாதி ஆகி வருகிறது."

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+