சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடி வருகை... சென்னையில் காலை 8 மணி முதல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்ற செய்யப்பட்டுள்ளது. அவரது வருகையை முன்னிட்டு, சென்னையில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி இன்று காலை சென்னை வருவதால் சென்னையில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    சென்னை: நாளை பிரதமர் மோடி வருகை… 5 மணிநேரம் போக்குவரத்தில் மாற்றம்!

    பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Modi Chennai Visit - Traffic change from 8 am to 1 pm check full detail

    பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னைக்கு வருகிறார். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, சென்னை, வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைக்கிறார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணித்து வைக்கிறார் பிரதமர் மோடி.

    பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் மாநகர பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் 6 மணிநேரம் திருப்பி விடப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக அண்ணாசாலை செல்லலாம். ராயபுரத்தில் இருந்து பாரிமுனை செல்லும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு வழியாக செல்லலாம். அண்ணாசாலையிலிருந்து ராயபுரம் செல்ல ஸ்பென்சர் பென்னி சாலை, நாயர் பாலம் வழியாக செல்லலாம்.

    சவுத்கெனால்ரோடு பகுதியில் இருந்து காந்திசிலை செல்ல கச்சேரி சாலை, லஸ், ராயப்பேட்டை சாலை வழியாக செல்லலாம். இந்த நேரங்களில் கனரக வாகனம் செல்ல அனுமதியில்லை என்று சென்னை போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

    English summary
    Traffic has been diverted from 8 am to 1 pm in Chennai as Prime Minister Modi arrives in Chennai this morning
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X