"டிரம்ப் கார்ட் 3".. ஒன்றல்ல 6 மாநிலங்களுக்கு எடப்பாடி "ஸ்கெட்ச்".. சுக்கு நூறாக உடையும் ஓபிஎஸ் கனவு
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான மூன்று திட்டங்களை கையில் எடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக உட்கட்சி மோதல் என்பது கன்னித்தீவு கதையாக நீண்டு கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின் தொடங்கிய இந்த கன்னித்தீவு கதையில் அடுத்தடுத்து பல ட்விஸ்டுகள், டர்ன்கள் ஏற்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, டெல்லி, டிடிவி தினகரன் என்று பலருக்கு இடையில் நடக்கும் அதிகார மோதலாக இந்த பூசல் பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் விசாரிக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் பட்சத்தில் அது உட்கட்சி மோதலை ஓரளவிற்கு முடிவிற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தனது பவரை காட்ட முக்கியமான 3 விஷயங்களை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக
அதிமுக கட்சி 1972ம் வருடம் அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்சியை எம்ஜிஆர் தொடங்கி 50 வருடங்கள் ஆகிவிட்டது. 51ம் வருடத்தில் அக்கட்சி அடியெடுத்து வைக்கிறது. ஆனால் இந்த முக்கியமான காலகட்டத்தில் அக்கட்சி கடுமையான உட்கட்சி பூசல் காரணமாக திணறி வருகிறது. உட்கட்சி பூசலால் இதுவரை இல்லாத சமநிலையற்ற தன்மை அக்கட்சிக்குள் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் தொடக்க விழா நடத்தப்பட உள்ளது.

மரியாதை
அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்ய உள்ளனர். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக இருப்பதால் இந்த விழாவை பெரிதாக கொண்டாட முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு முழுக்க இதற்காக பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தான் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் போதே இதை பிரம்மாண்டமாக நடத்தி தனது [பவரை காட்ட அவர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி 3 துருப்புசீட்டுகளை பயன்படுத்து உள்ளார் என்கிறார்கள்.

சீட்டு 1
அதன்படி தமிழ்நாடு முழுக்க அனைத்து அதிமுக மாவட்ட செயலாளர்களையும் இதற்காக கூட்டம் நடத்த எடப்பாடி உத்தரவிட்டு இருக்கிறாராம். அதாவது அமைப்பு ரீதியாக உள்ள எல்லா மாவட்டங்களிலும் இதற்காக நீங்கள் கூட்டம் நடத்த வேண்டும். பொதுக்கூட்டங்களை பெரிய அளவில் நடத்த வேண்டும். இந்த கூட்டங்களில் மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும். அதிமுகவின் வரலாறு பற்றி மட்டும் பேசாமல் ஒற்றை தலைமை பற்றியும் பேச வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளாராம்.

சீட்டு 2
இது போக அதிமுக சார்பாக நடத்தப்படும் கூட்டங்களில் எல்லாம் முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளாராம். அதாவது ஓபிஎஸ், சசிகலா போன்றவர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பன்னீர்செல்வம் பல இடங்களில் கூட்டம் நடத்த உள்ளார். அந்த கூட்டங்கள் செல்லாது என்று எடப்பாடி தரப்பு நடத்தும் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்கிறார்கள். தொடக்க விழாவில் இப்படி தீர்மானம் நிறைவேற்றுவது ஓ பன்னீர்செல்வத்தின் பிளான்களை நொறுக்கும் விதமாக இருக்கும் என்கிறார்கள்.

சீட்டு 3
இது போக தேசிய அளவிலும் அதிமுகவின் முகமாக தான்தான் தெரிய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக இருக்கிறார். இதற்காக 6 மாநிலங்களில் அதிமுக கூட்டங்களை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிமுக தொடக்க விழாவை நடத்த உள்ளார். அதிமுகவின் ஒற்றை முகம் நான்தான். வேறு யாரும் இல்லை என்று தேசிய அளவில் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி இந்த திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறாராம்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications