உள்ளதும் போச்சே.. அமமுக டிடிவி தினகரன் வருகையால் அதிரும் கூட்டணி! பெரிய சவாலில் மாட்டிக்கிட்ட அதிமுக
சென்னை: தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையிலான அணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைந்துள்ளது, எதிர்பார்த்தபடியே அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.. முக்கியமாக, சீட் விவகாரங்களில் அதிருப்திகளும், ஏமாற்றங்களும் தென்பட்டு வருகின்றன.. என்ன நடக்கிறது?
அதிமுகவின் கோட்டைகளாக கருதப்படும் மாவட்டங்களில் தொகுதி பங்கீடு விவகாரம் அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளதாக சொல்கிறார்கள்..

அமமுகவிற்கு 10க்கும் மேற்பட்ட தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்படலாம் என்று கூட்டணிக்குள் பேசப்பட்டதாக தெரிகிறது.. எனினும் சில முக்கியமான தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அமமுக அழுத்தம் கொடுப்பது அதிமுகவினருக்குப் பெரும் இடியாக மாறியுள்ளது.
வட மாவட்டங்கள்
வட மாவட்டங்களில் ஏற்கனவே பாமக போன்ற வலுவான கட்சிகள் கூட்டணியில் இருப்பதால், அங்கிருக்கும் தொகுதிகளை தக்கவைப்பதில் அதிமுகவுக்கு சிக்கல் நீடித்து வருகிறது..
உதாரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் பாமகவின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இப்போது அமமுகவும் என்ட்ரி தந்துள்ளதாம்.. அங்கு அமமுகவின் முக்கிய நிர்வாகியான ஏ.ஞானசேகரனுக்கு சீட் ஒதுக்கப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன..
அதேபோல் சோளிங்கர் தொகுதியில் என்.ஜி.பார்த்திபன், வந்தவாசியில் வெங்கடேசன் என அமமுகவினர் சீட் கேட்கும் இடங்கள் அனைத்தும் அதிமுக நேரடியாக போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்பதால், "இரட்டை இலை" சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற அச்சத்தில் இலை கட்சியினர் இப்போதே புலம்ப தொடங்கி விட்டார்களாம்..
தென் மாவட்டம் - தேனி
வடமாட்டங்களிலேயே இப்படியென்றால் தென் மாவட்டங்களிலும் நிலைமையை கேட்கவே தேவையில்லை.. குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளே குறிவைப்பது அதிமுகவினரை நிலைகுலைய செய்துள்ளது.
ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் தொகுதிகளை அமமுக குறிவைத்துள்ள நிலையில், பாஜக கம்பம் தொகுதியையும் தனது கணக்கில் வைத்துள்ளது.
ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டணிக்குள் வரும் பட்சத்தில் போடி தொகுதியையும் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்கிறார்கள்..
கூட்டணிக்கு தாரை வார்க்கும் அஇஅதிமுக
ஆனால், ஓபிஎஸ்ஸின் ஆளுமை குறைந்த பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தாரைவார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலும் இதே இழுபறி நீடிக்கிறது. காரைக்குடி தொகுதியில் கடந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற அமமுகவின் தேர்போகி பாண்டியை இந்த முறையும் வேட்பாளராக நிறுத்த டிடிவி தினகரன் ஆர்வம் காட்டி வருகிறாராம்..
ஆனால், அங்கு ஏற்கனவே செல்வாக்குடன் இருக்கும் பாஜகவும் அத்தொகுதியை விடாப்பிடியாகக் கேட்டு வருகிறது. ஒருவேளை காரைக்குடியை அமமுகவிற்கு ஒதுக்கினால், பாஜக சிவகங்கையை கேட்க முனையலாம்.. ஆனால் அங்கு அதிமுகவின் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பதால், யாருக்கு எந்த தொகுதி என்பதிலும் பெரும் குழப்பம் நிலவுகிறது.
அமமுகவின் வருகை
ஒட்டுமொத்தமாக பார்த்தால், அமமுகவின் வருகை அதிமுகவின் வெற்றி வாய்ப்பிற்கு பலம் சேர்க்குமா அல்லது தொகுதிகளை பங்கீடு செய்வதில் ஏற்படும் பிளவினால் பலவீனத்தை உருவாக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
"இரட்டை இலை" சின்னத்திற்கு இருக்கும் வாக்கு வங்கியை நம்பி, தேர்தலை சந்திக்க தயாரான அதிமுகவினருக்கு, கூட்டணி கட்சிகளின் அதீத எதிர்பார்ப்புகள் பெரும் சவாலாகவே மாறியுள்ளன.
இந்த அரசியல் சூழலில் தொகுதிகளை ஒதுக்குவதில் ஏற்படும் இழுபறியை சமாளிக்க அதிமுக தலைமை என்ன மாதிரியான உத்தியை கையாளப் போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications